Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறுகிறுத்துப் போன கிருஷ்ணகிரி.. போலி என்சிசி முகாமில் மாணவிகளுக்கு கொடுமை! ஹைகோர்ட் முக்கிய ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கிங்ஸ்லி பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் போலி என்சிசி பயிற்சி முகாம் நடத்தி இருக்கிறார். அதில் 19 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு மாணவியை சிவராமன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

sivaraman high court crime

இதை அடுத்து சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பள்ளியில் மேலும் பல மாணவிகளை சிவராமன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவராமன் மற்றும் அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை அடுத்து அந்த குழுவினர் பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே சிவராமன் குடும்ப பிரச்சினை காரணமாக எலியை கொல்ல வைக்கப்படும் பசையை தின்று தற்கொலைக்கும் முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போலீசார் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக மீண்டும் அவர் தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிவராமன் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

இதற்கு இடையே சிவராமனின் தந்தையான அசோக்குமார் அதற்கு முதல் நாள், அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவேரிப்பட்டினம் அருகே விபத்துக்குள்ளானார். மது போதையில் இருந்த அவர் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆகியோர் வழக்கின் விசாரணை குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.

நான்கு பள்ளிகளில் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் வேறு பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான சிவராமன் மரணம் தொடர்பான வழக்கில் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போலி என்சிசி முகாம் நடத்தியதாக கூறப்படும் ஒரு பள்ளியில் மட்டுமே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மற்ற மூன்று பள்ளிகளிலும் நேரில் விசாரணை நடத்தி மாணவிகளின் மனநலம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் சிவராமன் மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யும்படி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+