Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புத்தக கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! ஹைகோர்ட் அதிரடி தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை தமிழக அரசு பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுட்டிக் காட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் சென்னை 49ஆவது புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Thirupparnkundram

இந்த புத்தகம் எந்த வகையிலும் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புத்தகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

புத்தகக் கண்காட்சியில் அந்த புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதாக ஆகிவிடும் என்றும் அவர் வாதிட்டார். தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்சவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான ஏ.ஆர். சுந்தரேசன், அந்த புத்தகத்தில் களங்கப்படுத்தும் வார்த்தைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

நீதிபதி எழுப்பிய கேள்வியில், "அறிவுசார் தளமான புத்தகக் கண்காட்சியில் இது மாதிரியான செயல்கள் அனுமதிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். அரசு தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன், முதல்வர் இது போன்ற செயல்களை விரும்புவதில்லை என்றும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும், புத்தகக் கண்காட்சி அரசால் நடத்தப்படவில்லை என்றும் உறுதியளித்தார்.

கீழைக்காற்று பதிப்பகம் மூன்று வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை அதே நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயசந்திரன்,கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பு, தர்கா நிர்வாகம், கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவை ஆஜராகி வாதிட்டிருந்தனர்.

இந்த வாதங்கள் எல்லாம் டிசம்பர் 18ஆம் தேதி முடிவடைந்தது. தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த 6ஆம் தேதி நீதிபதிகள் அமர்வு தங்கள் தீர்ப்பில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பளித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு சொல்வது நம்பத்தகுந்த காரணமாக இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். பைபிளில் உள்ள வரிகளை மேற்கோள்காட்டியும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். எனினும் மதுரை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். எனவே பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தீர்ப்பை பொருத்தமட்டில் வரும் கார்த்திகை தீபத்தில் விளக்கு ஏற்றப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம்தேதி திருக்கார்த்திகை தீபம் வருகிறது. எனவே அன்றைய தினம் தீபம் ஏற்ற வாய்ப்புள்ளது. கோயில்கள், மலை உச்சி போன்ற இடங்களில் கார்த்திகை தீபம் அன்று மட்டுமே விளக்கேற்றப்பட வேண்டும் என திருப்பரங்குன்றம் கோயில் அர்ச்சகர்கள் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+