சட்ட விரோத தொலைபேசி இணைப்பு.. மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு!
சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, சென்னை போட் கிளப்பில் உள்ள அவரது வீட்டில் சட்ட விரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆரம்பித்து, அதன்மூலம் தனது சகோதரரின் சன் டிவி நிறுவனத்துக்கு உபயோகப்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு கிளம்பியது.

இதனால் அரசுக்கு சுமார் 1 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியது. மேலும் சிபிஐ அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மாறன் சகோதர்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் கடந்த மார்ச் மாதம் மாறன் சகோதர்களை விடுவித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, இந்த வழக்கில் மாறன் சகோதர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டுப் பதிவுகளை ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கவுதமன், கண்ணன், ரவி ஆகியோர் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
அமைச்சருக்கு தொலைபேசி இணைப்புக்கான உச்சவரம்பு என்று எதையும் விதிமுறை குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாறன் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெகதீஷ் சந்திரா, வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கினார்.
அதில், சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் பெற்றது தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிதாக குற்றச்சாட்டை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவும் சிபிஐ நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications