சிறுவன் கடத்தல் வழக்கு.. கைதாகிறாரா பூவை ஜெகன்மூர்த்தி? முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரத்தில் இளைஞர் தனுஷின் தம்பியை ஒரு கும்பல் கடத்தினர். இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Madras High Court Rejects Pre-Arrest Bail for Puratchi Bharatham Leader poovai jaganmoorthy in Kidnapping Case

இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம் கார் கொடுத்தது தெரிய வந்த நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் போலீசாரை நீண்ட நேரம் அனுமதிக்கவில்லை.

இதனால் தாம் கைது செய்யப்படலாம் என்பதால், முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் விசாரணையின் போதே பூவை ஜெகன்மூர்த்தியை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்பின் அவரிடம் ஒருநாள் விசாரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், சிறுவனின் கடத்தலுக்கு மூளையாக பூவை ஜெகன்மூர்த்தி செயல்பட்டுள்ளார். ஏற்கனவே சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான 5 பேருடன் பூவை ஜெகன்மூர்த்தி இருக்கும் காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்ய அனுமதிக்க வேண்டும். அவருக்கும் ஏடிஜிபி ஜெயராமுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும். அதனால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+