ஜனநாயகன் சென்சார் வழக்கில் வாதங்கள் நிறைவு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் தரப்பு, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் சிக்கி 41 மக்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்றும் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

ஜனநாயகன் படம் பிரச்சனை
மறுபக்கம் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படமும் எக்கச்சக்கமான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்தப் படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இதை எதிர்த்து ஜனநாயகன் தயாரிப்பு நிறுவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இன்று விசாரணை
அதை விசாரித்த தனி நீதிபதி மறு ஆய்வுக்கான பரிந்துரையை ரத்து செய்து, ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே அதை எதிர்த்து தணிக்கை வாரியம், உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்தனர். அன்றைய தினமே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இதனால் ஜனநாயகன் படம் வெளியாக தடை தொடர்கிறது. இது விஜய் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியமு. இதனை எதிர்த்து ஜனநாயகன் படக்குழு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தணிக்கை வாரியம் காரசார வாதம்
தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் ஜனநாயகன் படம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், "மறுதணிக்கை தொடர்பாக நாங்கள் ஜனவரி 5 ஆம் தேதியே தகவல் சொல்லிவிட்டோம். 6 ஆம் தேதி தான் படக்குழு வழக்குக்கு சென்றார்கள். ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்குவதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை
14 காட்சிகளை நீக்கிய பிறகு படத்தை பார்த்தாது முடிவு செய்யலாம் என்று கூறினோம். அவர்கள் காட்சிகளை நீக்கிவிட்டதால் சான்றிதழ் கேட்டனர். இறுதி முடிமவு எடுப்பதற்கு முன்பாக, புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதால் உடனடி நிவாரணம் கோர முடியாது, எங்களுக்கு அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் 72 நிமிடங்களுக்கு மேலான படங்களுக்கு தணிக்கை வாரிய தலைவர் தான் முடிவு செய்வார்" என்று கூறினர்.
மேலும், மறு ஆய்வுக்கு 20 நாட்களில் குழு அமைக்க வேண்டும். மறு ஆய்வுக்கு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம். வழக்கு தொடுக்கப்பட்டிருக்காவிட்டால் இந்நேரம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும் என்று தணிக்கை வாரியம் வாதமிட்டது.
தலைமை நீதிபதி
தணிக்கை வாரியம் சார்பில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாதிடப்பட்டது. அதைக் கேட்ட தலைமை நீதிபதி, "படத்தை பார்த்தது யார். மண்டல தணிக்கை வாரிய அதிகாரி படத்தை பார்த்தாரா. தனி நீதிபதி ஒரே நாளில் முடிவெடுத்துள்ளார். தணிக்கை வாரியத்திற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி முடிவு செய்துள்ளார். இன்றே உத்தரவு வழங்க சொல்லி, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
தணிக்கை வாரியத்தின் வாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உணவு இடைவேளைக்குப் பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். உணவு இடைவெளிக்கு பிறகு வழக்கு மீண்டும் விசாரணை வந்தது. படக்குழு தரப்பில், "டிசம்பர் 18 ஆம் தேதி தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம். டிசம்பர் 19 ஆம் தேதி படத்தை பார்த்தோம். தணிக்கை வாரியம் ஆட்சேபனை செய்த காட்சிகளை நீக்கி கடந்த டிசம்பர் 25ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டோம். ஆனால் அது தொடர்பான விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. தணிக்கை வாரியம் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜனநாயகன் படம் சென்சார் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
Jana Nayagan: ஜனநாயகன் படம் செல்போனில் இருந்தா உடனே அழிங்க.. கிரிமினல் நடவடிக்கை பாயும்.. கேவிஎன் நிறுவனம் வார்னிங் -
‘ஜனநாயகன்’ லீக் ஆனது தவறு இல்ல.. ஆதங்கத்துடன் நடிகர் சூரி போஸ்ட்.. விஜய்க்கு சப்போர்ட்டுக்கு வந்த விஜய் தேவரகொண்டா -
திருட்டு சைட்டை பாராட்டும் விஜய் ரசிகர்கள்.. "ஜனநாயகன்" லீக் விவகாரத்தில் இதை யாருமே எதிர்பார்க்கல -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
லீக்கான ‘ஜனநாயகன்’.. இஸ்லாமியர்களுக்கு எதிரான வசனங்கள்.. பற்றிக்கொண்ட நெருப்பு.. விஜய்க்கு செக்! -
Jana nayagan: லீக் ஆன ஜனநாயகன் படம்.. இயக்குநர் ஹெச் வினோத்தின் உருக்கமான பதிவு! வெளியான அதிர்ச்சி தகவல் -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
ஜனநாயகன் லீக் பற்றி தைரியமாக போஸ்ட் போட்ட சிவகார்த்திகேயன்.. ஓபனா சொல்லிட்டாரே!












Click it and Unblock the Notifications