8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.. 10 ஆண்டு கடுங்காவல்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயத்தில், குற்றவாளியின் குழந்தைகள் படிப்பை தொடர உரிய உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் தமிழக அரசை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே, இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த நபரை கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர் சிறுமியை பலாத்காரம் செய்ததற்கு உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அந்த நபரை கடந்த 2014-ம் ஆண்டு விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அரசு சார்பில் வழக்கறிஞர் கிஷோர் குமார் ஆஜராகி வாதிட்டார் இந்நிலையில், இந்த வழக்கானது, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, குற்றவாளியின் குடும்பப் பின்னணி மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டும், குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் அரசு உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படியும் சமூக நலத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications