அமைச்சர்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவால் விசாரணையை ஒத்திவைத்த ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் தற்போதைய அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மொத்தம் 6 பேர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போதைய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி (திமுக), வளர்மதி (அதிமுக) ஆகியோர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Madras High Court to begin final hearing in Suo motu pleas against Ministers from today

முன்னாள் அமைச்சர் பொன்முடி: தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2 சொத்து குவிப்புகள் வழக்கு போடப்பட்டன. 2006-2011 ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பொன்முடி மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது. இந்த விடுதலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: 2006-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் நடந்த நிலையில் 2012-ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை மீண்டும் தாமாக முன்வந்து விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்குகள்: 2006- 2011-ல் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தனர் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு: 2006-2011-ல் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. அப்போது 2008-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக அமைச்சர் ஐ.பெரியசாமி ஒதுக்கினார் என்பது வழக்கு. 2012-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி வழக்கு: 2001-2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு வளர்மதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலை உத்தரவை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வைந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இன்று முதல் இறுதி விசாரணை: இந்த வழக்குகள் கடந்த ஜனவரி 9-ந் தேதியன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகளில் இறுதி விசாரணை பிப்ரவரி 5-ந் தேதி முதல் நாள்தோறும் நடைபெறும் என்றும் பிற வழக்கு விசாரணைகள் பாதிக்காத வகையில் மாலை 3 மணிக்கு மேல் இவ்வழக்குகள் விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் இன்று முதல் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு: இதற்கிடையே, இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருவதற்கு தடை விதிக்க கோரி அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் நேற்று முன்தினம் தனது அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் இந்த வழக்கு மீண்டும் ரித்திகேஷ் சாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தார். ஐகோர்ட் தலைமை நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவின்படி, ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கு விசாரணையை தொடர்வாரா அல்லது தலைமை நீதிபதி விசாரிப்பாரா என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+