'தல' 'தலை' தப்பாது போலயே..செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஆளும் திமுகவில் மின்துறை அமைச்சராக இருக்கிறார் செந்தில் பாலாஜி. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைசராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தார் செந்தில் பாலாஜி என்பது வழக்கு. செந்தில் பாலாஜியுடன் அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தம் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தாக்கல் செய்தார். இன்னொரு பக்கம், பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் மேலும் சிலர் புதியதாகவும் மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முன்னர் ரத்து செய்திருந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த ரத்து உத்தரவுக்கு தடை விதித்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது. ஆகையால் மூன்று வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்க நபராக இருக்கிறார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உரிய அறிவுறுத்தல்களை ஏற்கனவே வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என்றார். செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் கொடுத்த மனுதாரர்களும் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்தால் அவரிடம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்காது. ஆகையால் வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டனர். தமிழக போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திலக், இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவஞானம், இந்த வழக்கில் அக்டோபர் 31 திங்கள்கிழமையன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியிருந்தார். இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி சிவஞானம்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications