Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம்; ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது! சென்னை ஐகோர்ட்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது அவசர வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்ற நீதிபதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் இருப்பினும் முடிவை அறிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே, பிரச்சினை இருந்து வருகிறது. இடையில் சில காலம் மட்டும் ஆட்சியில் இருந்த சமயத்தில் ஓபிஎஸ், எடப்பாடி இரட்டை தலைமையின் கீழ் கட்சி செயல்பட்டது.

இப்போது கடந்த சில மாதங்களாகவே இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து உரசல் நிலவி வருகிறது. ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தனித்தனியாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

அதிமுக

அதிமுக

கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ் மற்றும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், தனது அனுமதி இல்லாமல் கூடிய இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த விவகாரத்தில் இதுவரை எடப்பாடிக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக அங்குப் பல அதிரடி நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

வழக்குகள்

வழக்குகள்

ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் சமீபத்தில் தான் எடப்பாடி தரப்பு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் பொதுக்குழு கூட்டப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த மனுவை இப்போது தொடர்ந்துள்ளனர் என்றும் இதனால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

பொதுச்செயலாளர் தேர்தல்

பொதுச்செயலாளர் தேர்தல்

இதேபோல வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் தாங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு ஏப்ரல் 11இல் விசாரணைக்கு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கும் அதே நேரத்தில், எடப்பாடியை அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யும் நடவடிக்கை நடந்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.

எடப்பாடி வேட்புமனு தாக்கல்

எடப்பாடி வேட்புமனு தாக்கல்

இன்று மாலை வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் நிலையில், வரும் மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யவுள்ளனர். அதற்கு மறுநாள் முடிவுகள் அறிவிக்கப்படும். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. முதல் நாளான நேற்றே எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து மற்றவர்கள் போட்டியிட வாய்ப்புகள் குறைவு என்பதால் அவர் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்பு உள்ளது.

அவசர மனு

அவசர மனு

எடப்பாடி தரப்பின் இந்த திடீர் முடிவால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியது. மேலும், தேர்தல் ஆணையத்திடமும் முறையிட உள்ளனர். இதனிடையே நேற்றைய தினம் சென்னை ஐகோர்டில் மனோஜ் பாண்டியன் முறையீடு செய்தார். இரட்டைத் தலைமையை ஒழித்து ஒற்றைத் தலைமையை உருவாக்கிக் கொண்டுவரப்பட்ட, தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இன்று விசாரணை

இன்று விசாரணை

மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவசர முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, இதை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். அதன்படி, இந்த மனுவை விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிபதி கே.குமரேஷ் பாபு இன்று விசாரிக்கிறார். இந்த வழக்கு விசாரணை இப்போது தொடங்கி நடைபெற்று வருகிறது

உத்தரவு

உத்தரவு

மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவசர முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, இதை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். அதன்படி, இந்த மனுவை விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிபதி கே.குமரேஷ் பாபு இன்று விசாரிக்கிறார். இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் இருப்பினும் முடிவை அறிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்

ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் காரசார விவாதம் முன்வைக்கப்பட்டது. ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவில் வாக்காளர் பட்டியல் எங்கே? என்று கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் தரப்பு, பொதுச்செயலாளர் பதவி தேர்தலில் கட்சி அடிப்படை விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் 36 மணிநேரத்தில் 20 மா.செ.க்கள் முன்மொழிதல், வழிமொழிதல் எப்படி சாத்தியம்? என்று கேட்டனர். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தல் அவசர கதியில் நடத்தப்படுவதால் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தடை விதிக்க வேண்டும்

தடை விதிக்க வேண்டும்

மேலும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், "சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி ஞாயிறு வேட்பு மனு தாக்கல் நிறைவு என அறிவித்துவிட்டனர்.. 10 ஆண்டுகள் உறுப்பினர், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகி என்ற விதியில் திருத்தம் செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் சாதாரண தொண்டன் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். தேர்தலை நடத்த அனுமதித்தால் இன்று மாலையே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலராக அறிவித்துவிடுவார்கள். எனவே தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டனர்.

எடப்பாடி தரப்பு வாதம்

எடப்பாடி தரப்பு வாதம்

இதையடுத்து எடப்பாடி தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது. அதாவது, "அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலை எதிர்ப்பவர்கள் அதிமுக உறுப்பினரே இல்லை.. மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிபிடி பிரபாகரன் அதிமுகவில் இல்லை... ஒன்றரை கோடி தொண்டர்களில் 1% கூட ஓபிஎஸ்-க்கு ஆதரவும் இல்லை.. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையீடு கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.. அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தல் நடவடிக்கை தொடங்கிவிட்டது என்பதால் கோர்ட் தலையிட முடியாது.. அதிமுக பொதுச்செயலாளர் பதவி 1.5 கோடி தொண்டர்களால் நடத்தப்படுகிறது.

நீதிபடி தீர்ப்பு

நீதிபடி தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தீர்ப்பு வந்துவிட்டதால் தேர்தலை நடத்தலாம்.. வழக்கைச் சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை கோர முடியாது.. பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சியை நடத்த முடியும்" என்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு முடியும் வரை, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கலாமே என்று யோசனை தெரிவித்த நிலையில், அதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்ற நீதிபதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம் என்றும் இருப்பினும் முடிவை அறிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+