அதிமுக பொதுச்செயலாளர் பதவி- ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
அதிமுகவின் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் அணி தரப்பில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனி நீதிபதி தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்தார். இதற்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ஓபிஎஸ் அணியின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, அதிமுகவில் தற்போது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறி வழக்கு விசாரணை ஏப்ரல் 20-ல் நடைபெறும் என ஒத்திவைத்தனர்.
பின்னர் ஏப்ரல் 16-ந் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யபப்ட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்ப்பட்டது. இந்த மனு மீதும் விவாதம் நடத்தப்பட்டது. இவ்வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.மணிசங்கர், வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆகியோர், ஈரோடு இடைத்
தேர்தலின்போது எங்களுடன் கலந்துபேசுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இபிஎஸ் அணி அப்படி நடந்து கொள்ளவில்லை. அதேபோல செயற்குழு கூட்டத்துக்கும் அழைப்பு அனுபவில்லை என சுட்டிக்காட்டினர். ஆனால் இபிஎஸ் அணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேறு- கர்நாடகா தேர்தல் வேறு என கூறினார். அதிமுக சார்பாக விஜய் நாராயணன் வாதிடுகையில், ஓபிஎஸ்-க்கு 4 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தான் இருக்கிறது. ஆனால் இபிஎஸ்-க்கு 2,500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது என வாதிட்டார்.
பின்னர் அனைத்து அப்பீல் மனுக்கள் மீதும் ஏப்ரல் 20, 21-ல் விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications