ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என ஹைகோர்ட் தீர்ப்பு- லோக்சபாவில் அதிமுகவுக்கு இனி எம்பி கூட இல்லை?
சென்னை: தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது. இதனால் லோக்சபாவில் அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலைமை உருவாகி இருக்கிறது. இருப்பினும் ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்காக இத்தீர்ப்பை 30 நாட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். ஆனால் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் உள்ளிட்ட உண்மை தகவல்களை மறைத்தது போன்றவற்றை சுட்டிக் காட்டி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி வழக்கறிஞர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தது.

அதேநேரத்தில் ரவீந்திரநாத் தரப்பு மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து இத்தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் லோக்சபாவில் அதிமுகவுக்கு இனி ஒரு எம்பி கூட இல்லை என்கிற நிலைமை உருவாகி உள்ளது. அதிமுக வரலாற்றில் 1996-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அக்கட்சி ஒரு இடம் கூட வெல்லவில்லை. அப்போதைய லோக்சபாவில் அதிமுகவுக்கு ஒரு எம்பி கூட இல்லை. அதேபோல 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 33 இடங்களில் போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் லோக்சபாவில் ஒற்றை எம்பியாக ரவீந்திரநாத் இருந்து வந்தார். தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒரு எம்பி பதவியையும் அதிமுக இழக்கும் நிலைமை உருவாகி உள்ளது.
ஆனாலும் அதிமுகவுக்கு ஆறுதலாக, ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications