Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யானைகளுக்கு எமனாக மாறும் மின் வேலிகள்! மின்வாரியத்திற்கு வார்னிங் கொடுத்த சென்னை ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

Elephants Electricity Board Tamil Nadu High Court


அப்போது, சமீபத்தில் ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில், மீண்டும் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் இறந்த சம்பவத்தை, சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இவ்வளவு நாள் காலதாமதம் ஏன்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், யானைகள் மின்வேலியில் சிக்கி இறப்பதைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது.

நிதி ஒதுக்கீடுக்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், விரைவில் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த கருவிகள் பொருத்தப்பட்டால், யானைகள் மின்வேலியில் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் உடனே துண்டிக்கப்படும். முக்கிய வழித்தடங்களில், இந்த கருவிகள் பொருத்தப்படும் என்றார்.

இதையடுத்து, யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை எனில், நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும், மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மின்வேலியை மித்து, மின் கம்பி உரசி என இயற்கைக்கு மாறாக 128 யானைகள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் காடுகள் வேகமாக சுருங்கி வருவதை போலவே, தமிழ்நாட்டிலும் காடுகளின் பரப்பளவுகள் குறைந்து வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள்-மனிதர்கள் மோதல் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. குறிப்பாக யானை-மனிதன் மோதல் அதிக அளவு நடக்கின்றன. அதற்கு சரிசமமாக யானை உயிரிழப்புகளும் நடக்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தருமபுரி மாவட்டத்தின் மாரண்டஹள்ளியில் சட்டவிரோத மின் வேலியை உரசி ஒரே கூட்டத்தை சேர்ந்த 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல இதே தருமபுரியில் காரியமங்கலம் அருகே ஏரி கரையை யானை ஏறியபோது மின்சார கம்பி உரசி சம்பவ இடத்திலேயே ஒரு யானை உயிரிழந்தது.

இந்த அடுத்தடுத்த சம்பவங்களின் விளைவாகவே தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+