ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அறிய சென்னை ஐஐடி கண்டுபிடித்த சூப்பர் கருவி
சென்னை : பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு, ரத்த நாளத்தின் ஆரோக்கிய தன்மையை, ஆரம்ப நிலையிலேயே மதிப்பிடுவதற்காகவும், இதய நோய்களின் முன்னெச்சரிக்கை மதிப்பீடுகளை பெறுவதற்கும் ஆர்ட்சென்ஸ் என்ற புதிய பரிசோதனைக் கருவியை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள 'ஆர்ட்சென்ஸ்' கருவி மூலம் நமது ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அறிய முடியும். அத்துடன் வயதை மதிப்பீடு செய்வதற்கும் உதவும். இதன் மூலம் இதய நோய்களுக்கான ஆரம்பக்கட்ட பரிசோதனையை வழங்க முடியும். இந்த கருவி உடல் செல்-நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதில் என்ன விஷேசம் என்றால், இந்த கருவியை பயன்படுத்த நிபுணர்களாக இருக்க வேண்டியது இல்லை. இந்த கருவில் மூலம் நிபுணர்களாக இல்லாவிட்டாலும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்த நாள ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும். அத்துடுன் என்ன என்பதை கணித்து பன்படுத்த முடியுமாம்.
இதற்காக 'இமேஜிங்' அல்லாத கணினி தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இதுவரை இந்த கருவியைக்கொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரத்த நாள சோதனை நடத்துவதற்கு இதனை பயன்படுத்தவேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் விரும்புகிறார்களாம்.
இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை முக்கியம். எனவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் 5 பயன்பாட்டு காப்புரிமைகளை இத்தொழில்நுட்பம் பெற்றுள்ளது., 10 வடிவமைப்பு காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளை பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறதாம். விரிவான சோதனைக்குப்பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு இந்தக்கருவி தயாராகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி சென்னை ஐ.ஐ.டி., மின் பொறியியல் துறை உதவி பேராசிரியர், டாக்டர் ஜெயராஜ் ஜோசப் கூறும் போது, இதயம், ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தான் உலகம் முழுதும் இறப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே, இதயம், ரத்த நாளங்களில் உள்ள கோளாறை கண்டறிந்து, சரி செய்வது அவசியம். அப்படி கண்டுபிடிக்க உருவாக்கப்பட்ட கருவி தான் ஆர்ட்சென்ஸ் கருவி. இந்த கருவி மூலம்
நோய் மற்றும் முதுமை காரணமாக, ரத்தநாளங்களின் சுவரில் ஏற்படும் மாற்றங்களின் விளைவை துல்லியமாக அளவிட முடியும். அதனால், தேவையான மருத்துவ சிகிச்சைகளை, தேவையான நேரத்தில் மேற்கொள்ளலாம். இந்த கருவி குறித்த கூடுதல் விபரங்களை, http://artsens.tech/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
ஆர்ட்சென்ஸ் கருவியின் ஒரேயொரு சோதனையால், பல்வேறு நோய் பாதிப்பு ஆளானவர்களுக்கு, ரத்த நாளத்தின் ஆரோக்கிய தன்மையை, ஆரம்ப நிலையிலேயே மதிப்பிடலாம் முடியும் என்றும் இதய நாள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு, பாரம்பரிய இதயநாள ஆபத்து அறிகுறிகள் ஏற்படும்போதே, இந்த கருவியால் சோதித்து கண்காணிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications