திலகவதி விடமாட்டாங்களே.. மெட்ராஸ் ஐஐடி-யில் நுழைந்த டீம்.. கசியும் "சீக்ரெட்".. பெருகுகிறது நம்பிக்கை
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சூழலில், இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது... இதுகுறித்து சில தகவல்களும் கசிந்து வருகின்றன.
இந்தியாவில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களிலேயே மத்திய அரசால் நடத்தப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) தலைசிறந்ததாக கருதப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடந்தோறும் படித்து வெளியேறி வருகிறார்கள்.. சென்னை, மும்பை, கான்பூர், லக்னோ உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது ஐஐடி.
IIT வளாகம்: அதேசமயம், சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் ஐஐடி வளாகங்களில் நடப்பதாக, அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.. காரணம், முறையாக இங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் இங்கு உயர்சாதியினர் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மற்றொருபுறம், ஐஐடி வளாகங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.. அதுவும் சமீபகாலமாக, இதுபோன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் இந்த வருடம் மட்டுமே மொத்தம் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த மாணவர்களின் தற்கொலைகள் பெருமளவில் மர்மமாகவே உள்ளன.. தற்கொலை என்ற செய்திகள் வருகிறதே தவிர, அதற்கான காரணங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை.. அதற்காக சொல்லப்படும் விளக்கங்களும் போதுமானதாக இருப்பதில்லை.. எனவே, ஐஐடி தற்கொலைகள் எப்போதுமே மர்மமான ஒரு விஷயமாகவே நீடித்து வருகிறது.
நீளும் மர்மங்கள்: இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த தற்கொலைகளின் மர்மத்தை உடைக்க, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழுவை தமிழக அரசு கடந்த மாதம் அமைத்திருந்தது.. இந்த குழுவில், திலகவதி ஐபிஎஸ்ஸுடன், சபிதா ஐஏஎஸ், கண்ணகி பாக்கியநாதன் ஐஏஎஸ், பேராசிரியர் ரவீந்திர கெட்டு மற்றும் அமல் மனோகரன் ஆகிய 5 பேர் கொண்ட குழு இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.
5 பேர் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.. திலகவதி தலைமையிலான குழுவானது, கடந்த 12ம் தேதி விசாரணையை ஆரம்பித்தது.. அதன்படி, தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெற்றோர் என 30 பேரிடம் நேரடியாகவும், 20 பேரிடம் வீடியோ கான்பரஸ் வாயிலாகவும் விசாரணையை செய்தது. அதேபோல, ஐஐடி மாணவர்கள் உள்ளிட்டோரிடமும் இந்தக் குழு தனித்தனியாக விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
தகவல்கள்: எனினும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்த, சில தகவல்களும் கசிந்தபடியே உள்ளன.. பல மாணவர்கள் தாங்களாகவே விசாரணைக்கு முன்வருகிறார்களாம்.. இதை விசாரணைக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.. அதுமட்டுமல்ல, ஐஐடி நிர்வாகம் தரும் அழுத்தமானது மாணவர்களுக்கு பெரும் உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், விசாரணை குழு முன்பு மாணவர்கள் புகார் தந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, இந்த விசாரணைக்குழுவானது, ஐஐடி நிர்வாக பேராசிரியர்கள், மற்றும் உதவி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாம்..
அதுமட்டுமல்ல, ஐஐடி பேராசிரியர்கள் சிலர் கொடுக்கும் அழுத்தமே மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்று பெற்றோர்களும், மாணவர்களும் சொன்னதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாம்.. குறிப்பாக, ஆராய்ச்சி மாணவர்களுக்கு (Phd Students) பேராசிரியர்களாக இருக்கக்கூடியவர்கள், அதிக அளவில் அழுத்தம் கொடுப்பது தெரியவந்திருப்பதாக விசாரணைக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலக்கட்டம்: அதாவது, தங்களின் "மதிப்பை" நிலைநாட்டுவதற்காக, குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட வேண்டும் என்று பேராசிரியர்கள் தொடர்ந்து அழுத்தம் தந்ததே பெரும்பாலான மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.. எனினும் அதிகாரிகள் இந்த விசாரணை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை.. விசாரணைகள் மொத்தமும் முடிக்கப்பட்டு, அதன்பிறகு இந்த குழுவின் இறுதி அறிக்கையானது, ஐஐடியின் நிர்வாகத்திடம் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது..
முன்னதாக, அந்த மாணவர்களின் நலன் கருதியும், எதிர்காலங்களை முன்னிறுத்தியும், தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஆஜராகும் மாணவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று ஐஐடி நிர்வாகம் சார்பில் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.. தற்போது, திலகவதி தலைமையில் விசாரணை துரிதமாகி வருவதால், ஐஐடி தற்கொலைகளின் மர்மங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications