திலகவதி முடிச்சிட்டாங்க.. மெட்ராஸ் ஐஐடியில் "டீமுடன்" நுழைந்து.. ரிப்போர்ட் ஒப்படைத்தது திலகவதி டீம்
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சூழலில், இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழு தனது விசாரணையை நடத்தி முடித்துள்ளது.
நம் நாட்டில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களிலேயே, மத்திய அரசால் நடத்தப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) தலைசிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடந்தோறும் படித்து வெளியேறி வருகிறார்கள்.. சென்னை, மும்பை, கான்பூர், லக்னோ உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது ஐஐடி.

அதேசமயம், சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் ஐஐடி வளாகங்களில் நடப்பதாக, அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.. காரணம், முறையாக இங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் இங்கு உயர்சாதியினர் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
துயர சம்பவங்கள்: மற்றொருபுறம், ஐஐடி வளாகங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.. அதுவும் சமீபகாலமாக, இதுபோன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் இந்த ஒரு வருடம் மட்டுமே மொத்தம் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த மாணவர்களின் தற்கொலைகள் பெருமளவில் மர்மமாகவே உள்ளன.. தற்கொலை என்ற செய்திகள் வருகிறதே தவிர, அதற்கான காரணங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை.. அதற்காக சொல்லப்படும் விளக்கங்களும் போதுமானதாக இருப்பதில்லை.. எனவே, ஐஐடி தற்கொலைகள் எப்போதுமே மர்மமான ஒரு விஷயமாகவே நீடித்து வருகிறது.
என்ன காரணங்கள்: இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த தற்கொலைகளின் மர்மத்தை உடைக்க, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழுவை தமிழக அரசு கடந்த மாதம் அமைத்திருந்தது.. இந்த குழுவில், திலகவதி ஐபிஎஸ்ஸுடன், சபிதா ஐஏஎஸ், கண்ணகி பாக்கியநாதன் ஐஏஎஸ், பேராசிரியர் ரவீந்திர கெட்டு மற்றும் அமல் மனோகரன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றிருந்தனர். அறிவிப்பு
இந்த குழுவானது, விசாரணையை அதிரடியாக ஆரம்பித்துள்ளது.. குறிப்பாக, ஐஐடி மாணவர்கள், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெற்றோர் என 30 பேரிடம் நேரடியாகவும், 20 பேரிடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவும் விசாரணையை செய்தது.. இந்த விசாரணையின்போது, பல மாணவர்கள் தாங்களாகவே விசாரணைக்கு முன்வருவதாகவும், அப்போது நிறைய தகவல்களை மாணவர்கள் இக்குழுவினரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் செய்திகள் கசிந்தன.
மன அழுத்தம்: அதாவது, ஐஐடி நிர்வாகம் தரும் அழுத்தமானது மாணவர்களுக்கு பெரும் உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், மாணவர்களே அனைத்து விஷயங்களையும் விசாரணை குழுவினரிடம் கூறியதாகவும் தெரிகிறது.
எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை.. அதேபோல, அந்த மாணவர்களின் நலன் கருதியும், எதிர்காலங்களை முன்னிறுத்தியும், தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஆஜராகும் மாணவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்றும் ஐஐடி நிர்வாகம் சார்பில் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணைக்குழுவானது, ஐஐடி நிர்வாக பேராசிரியர்கள், மற்றும் உதவி பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்த போவதாகவும், அதற்கு பிறகே இறுதி அறிக்கையை, ஐஐடியின் நிர்வாகத்திடம் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், திலகவதி தலைமையிலான குழுவின் அறிக்கையானது, ஐஐடி தற்கொலைகளின் தொடர் மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.
அறிக்கை தாக்கல்: இப்படிப்பட்ட சூழலில், சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைகளை தடுப்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை வலியுறுத்தும் 250-300 பக்க அறிக்கையை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழு ஐஐடியிடம் தற்போது சமர்ப்பித்திருக்கிறது. ஐஐடியில் முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 250 முதல் 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி ஐஐடி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
பரிந்துரை: தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் விசாரணை நடந்து முடிந்தது.
இறுதியாக தயாரான அந்த அறிக்கையில் சில முக்கியமான விஷயங்களை இந்த குழு பரிந்துரைத்துள்ளதாம். குறிப்பாக, ஐஐடி வளாகத்தில் மாணவர்கள், பேராசிரியர்களிடையே இணக்கமான சூழலை உறுதிப்படுத்த வேண்டும், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் ஐஐடி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகள் விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளதாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications