அண்ணாமலையை விமர்சித்தால்.. அதிமுக மாஜிக்களின் ஊழல் பட்டியல் ரிலீஸாகும்! மதுரை பாஜக நிர்வாகி மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என மதுரை பாஜக நிர்வாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் அந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெல்லவில்லை. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதுகில் சவாரி செய்து 4 எம்எல்ஏக்களை பாஜக வென்றது.

Madurai BJP activist warns AIADMK for releasing Ex ministers corruption list

இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாம் தோற்றோம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியதிலிருந்து பிரச்சினை எழுந்தது. அதற்கு பாஜக விமர்சித்தது. இதையடுத்து வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு சட்டசபையில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறி வந்தது. இது அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தரம் தாழ்ந்த வார்த்தையால் விமர்சித்தார். அப்போதும் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வப்போது இரு தரப்புக்கும் சண்டை ஏற்படுவதும் பின்னர் சமாதானமாக போவதுமாக இருந்தது. இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை ஒரு பத்திரிகை பேட்டியில் ஊழல்வாதி என மறைமுகமாக விமர்சித்தார்.

இது அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக என்ற பேச்சு எழுந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்மைக்காலமாக அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அரசியல் கத்துக்குட்டி என விமர்சித்ததும் பதிலுக்கு அண்ணாமலை, அவரை விஞ்ஞானி அமைச்சர் என கிண்டல் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ள நிலையில் பாஜக மதுரை மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும், தேசபக்தி நிறைந்த பொது மக்கள் இதயத்திலும் அதிக நன் மதிப்பை எங்கள் மாநில தலைவர் திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் பெற்று உள்ளதை உலகம் அறியும்.

ஆனால் தங்கள் இயக்கத்தின் இரண்டாம் கட்டதலைவர்கள் திரு.செல்லூர் ராஜ், திரு ஜெயக்குமார் உள்பட சிலர் எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருவதை எங்கள் மனதை புண் படுத்தி உள்ளது. தங்களுடைய இயக்க தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மிகுந்த மரியாதை வைத்து உள்ளனர்.

ஆனால் தங்கள் இயக்கத்தின் தலைவர்கள் புரட்சி தலைவி ஜெயலலிதா போன்று தங்களை நினைத்து கொண்டு நான்கு, ஐந்து அணிகளாக அதிமுக பிளவு பட்டதை மறந்து எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை தொடர்ந்து தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதை எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. தற்போது ஆளும் கட்சியான திமுக தொடர் ஊழல், வாரிசு அரசியலால் மக்கள் செல்வாக்கை இழந்து 15% குறைவான வாக்கு வங்கியை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு பணம் கொடுத்து குண்டர்களை வைத்து மிரட்டி பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வருவதை தமிழக மக்கள் அறிவார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்களுடைய" தோழமை இயக்கம் என்ற பரிவுடன் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைத்து சட்டசபையில் 66 எம்எல்ஏக்களை இடம் பெற வைத்ததை தாங்கள் நன்றி மறந்து விட்டீர்கள்.

இனிவரும் காலங்களில் திமுக. அதிமுக கட்சிகள் கூட்டணியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17% சதவீத வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணிபுரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும். ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என்று நடவடிக்கை எடுத்து ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

பாஜக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் 10 மாநகராட்சி மேயர் பதவியை தாங்கள் இழந்ததை மறந்து விட வேண்டாம் என்பதை நினைவு படுத்துகிறோம். புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் மற்றும் இரட்டை இலை சின்னத்தின் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக அமைதி காக்கின்றோம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை என்பதால் வழியில் பயமில்லை. இனிவருகின்ற காலங்களில் உங்கள் இயக்க தலைவர்கள் எங்கள் தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்களை அள்ளி வீசினால் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்து உரைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+