யூடியூபர் மாரிதாஸ் கைதை கண்டித்து.. மதுரையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னை: யூடியூபர் மாரிதாஸ் கைதானதைக் கண்டித்து மதுரையில் பாஜகவினர் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
Recommended Video
யூடியூபரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் அளித்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு வரும் 23-ஆம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாரிதாஸை கைது செய்ய காவல் துறையினர் சென்றபோது காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, கூட்டத்தை கூட்டி தொற்று பரவலுக்கு வழிவகுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர் பாஜக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் மற்றும் பாஜகவினர் 50 பேர் மீது திருப்பாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் யூடியூபர் மாரிதாஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசு கருத்துரிமையை நசுக்குவதாக கூறியும், பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும் மதுரை மாநகர பாகவினர் மற்றும் நிர்வாகிகள் பீபீகுளம் உழவர் சந்தை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாயில் கருப்புத் துணி கட்டி தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
மேலும் சட்ட ஆட்சியா, சர்வாதிகார ஆட்சியா, திமுக அரசு ஒழிக என்ற பதாகைகளை ஏந்தி கண்டனம் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
பிச்சை எடுத்த காசில்.. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.6 கோடி வழங்கிய.. மதுரை யாசகர்! சுவாரசிய தகவல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications