மதுரை மீண்டும் "சிவப்பாகுது"? பாஜக கேள்விகளால் உலுக்கிய "சிட்டிங் தோழர்" வேட்பாளரா? திமுக ரெடியாகுது
சென்னை: திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரத்து வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டி வருகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. தங்கள் கூட்டணி கட்சியோடு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையையும் தீவிரப்படுத்தி வருகின்றன..

அந்த வகையில் திமுக லீடிங்கில் உள்ளது.. தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, 2வது கட்ட பேச்சுவார்த்தையையும் ஆரம்பிக்க போகிறது. இப்போதைக்கு கூட்டணியில் பலமாகவும், வேகமாகவும் உள்ளது திமுக என்றே சொல்லலாம்.
3 தொகுதிகள்: அந்தவகையில், சிபிஎம் கட்சியும் தன்னுடைய கூட்டணி விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.. சில நாட்களுக்கு முன்பு மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.. அதாவது, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மொத்தம் 3 தொகுதிகளை கேட்பதாகவும், முக்கியமாக, மதுரை, கோவை இரண்டையும் திமுகவிடம் கேட்டு பெறும் நோக்கில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து ஸ்டாலினிடமும் ஏற்கனவே கமல் தரப்பில் தெளிவுப்படுத்தப்பட்டதாம்.. அதற்கு ஸ்டாலினும் "நல்லது நடக்கும்" என்று மட்டும் சொன்னாரே தவிர, எந்தவிதமான உத்தரவாதத்தை தரவில்லையாம். காரணம், கோவை தொகுதியானது ஏற்கனவே இடதுசாரிகள் வசம் இருக்கிறது. இப்போது, கோவையை கேட்கிறார் என்றதுமே, சிபிஎம் தரப்பு அதிர்ந்து போயுள்ளது.
நிறைய வளர்ச்சி: உடனே திமுக மேலிடத்திடம் சென்று, "சிட்டிங் தொகுதியை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.. தொகுதியில் நிறைய வளர்ச்சி பணிகளை செய்து வந்துள்ளோம்.. அதனால் தொகுதியை எங்களிடமிருந்து பறித்து விடாதீர்கள்" என்று ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார்களாம். அதனால்தான், கோவை தொகுதி வேண்டும் என்று கமல் கேட்டதற்கு, திமுக மேலிடம் பாசிட்டிவ் பதில் சொல்லவில்லையாம்.
இதற்கு பிறகு மதுரை தொகுதியை கேட்கலாம் என்று கமல் தரப்பில் யோசனை உள்ளதாம்.. ஆனால், இந்த மதுரையும் தோழர்கள் வசம் உள்ளது.. அதனால், மதுரையையும் திமுக ஒதுக்க முன்வருமா? என்பது சந்தேகம் என்றார்கள். இப்போது விஷயம் என்னவென்றால், எதிர்பார்த்தது போலவே, மதுரை, கோவை தொகுதியை இந்த முறையும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.
கூட்டணி: ஆனால், இந்த முறை மதுரையை கூட்டணிக்கு தர வேண்டாம், நாமளே நேரடியாக களமிறங்குவோம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறதாம்.. மதுரையில் ஏற்கனவே திமுக லோக்கல் பாலிட்டிக்ஸ் நிறையவே உள்ளன..
அதனால்தான், உட்கட்சி பூசலை தகர்க்கும்வகையில், அழகரியை முன்னிறுத்தி இந்த முறை தேர்தலை சந்திக்கவும் திமுக மேலிடம் தயாராவதாக தகவல்கள் கசிந்தன. இப்போது மதுரையை கூட்டணிக்கு தர கூடாது என்று திமுக வலியுறுத்தி வருவது, மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறதாம்..
சிவப்பு: எனினும், இந்த முறையும் "சிவப்பு" கட்சிக்கே தொகுதி ஒதுக்கீடாகலாம் என்றும், மத்திய அரசை உலுக்கி கேள்வியெழுப்பும் வெங்கடேசன் எம்.பி.யே இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.. அப்படியானால் மீண்டும் "தோழர்கள்" வசம் மதுரை செல்கிறதா? தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications