சென்னை கமிஷனர் ஆபீசுக்குள்ளே திடீர்னு நுழைந்த "நகைக்கடை".. மதுரை வரிச்சியூர் செல்வம் திருந்திட்டாராமே
சென்னை: சென்னை கமிஷனர் ஆபீசுக்குள் திடீரென உள்ளே நுழைந்தார் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்.. ஏன் தெரியுமா? என்ன நடந்தது தெரியுமா?
மதுரையை சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம்.. வரிச்சியூர் என்பது அங்குள்ள ஒரு ஊர்.. பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் செல்வம்.. முன்னாள் திமுக நிர்வாகியும்கூட.

வரிச்சியூர் செல்வம்: இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இப்போது ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வருகிறார். இவரது உடம்பெல்லாம் தங்க நகை மின்னும்.. இதுதான் செல்வத்தின் டிரேட் மார்க்..
அதேபோல் எப்போதுமே காஸ்ட்லி கார்களில் ரவுண்டு அடிப்பார்.. சொகுசு மற்றும் ஆடம்பர விடுதிகளுக்கு போய் வருவார்.. அதனாலேயே இவரை பற்றின செய்திகள் அடிக்கடி சோஷியல் மீடியாவில் வலம்வலம் வந்து கொண்டே இருக்கும். விஐபி தரிசனத்தில் உள்ளே சென்று இவர், அத்திவரதரை கும்பிட்டதுகூட சர்ச்சையானது..
பகீர் விளக்கம்: அதற்கு இவர் விளக்கம் சொல்லும்போது, "இவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு எனக்கு தெரியாது. நான் வெச்சிருக்கிற கார் 1 கோடி ரூபாய்.. நான் ஒரு லேன்ட் ஓனர்.. என்கிட்ட 7 கார்கள் இருக்கு.
நான் விவிஐபி இல்லையா? நான் போட்டிருக்கிற நகை மொத்தம் 250 பவுன். இது போக, பைனான்ஸ் தனியா பண்றேன். வாரத்துல 3 நாள் வெளியூர், மீதி 4 நாள் சாயங்காலத்துல பேரன், பேத்திகளுடன் வாக்கிங் போவேன், ஷாப்பிங் காம்பிளக்ஸ் போவேன். சாப்பிடுவேன். எனக்கு ரோல் மாடல் யாருன்னு பார்த்தீங்கன்னா, இப்போ லண்டன்ல இருக்கார் இல்லே... ரூ.9 ஆயிரம் கோடி ஏமாத்திட்டு, அவர்தான் என் குருநாதர்.. அவர் இப்படித்தாங்க வாழ்றாரு" என்று கூறி மக்களை அதிர வைத்தவர் இந்த வரிச்சியூர் செல்வம்.
அதிரடி கைது: போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் பலமுறை ஜெயிலுக்கு போயிருக்கிறார் ரவுடி வரிச்சியூர் செல்வம்.. கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் தன்னுடைய கூட்டாளியை சுட்டுக்கொன்றதுடன், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தாமிரபரணியில் வீசிய வழக்கில், வரிச்சியூர் செல்வத்தை கடந்த ஜூன் மாதம் விருதுநகர் போலீஸார் கைது செய்தார்கள்.. சிறையிலும் அடைத்தார்கள்.
சமீபத்தில்தான், ஜாமீனில் வெளியே வந்தார் ரவுடி வரிச்சியூர் செல்வம்.. சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் ஆபீசுக்கு நேற்று திடீரென வந்தார்.
பரபரப்பு: அங்கு தன்னை கைது செய்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்கை சந்தித்து, ரவுடியிசத்தை கை விட்டு திருந்தி வாழ போவதாக சொன்னார்.. இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளாராம். ரவுடி வரிச்சியூர் செல்வம் திடீரென கமிஷனர் ஆபீசுக்கு வந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications