வாக்காளர்களை கவர புது அஸ்திரம்.. மிரளவிடும் கட்சிகள்.. கடிவாளம் போடுமா தேர்தல் ஆணையம்
சென்னை: ஓட்டுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தப்படுவதை தடுக்க கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தேர்தல் முடியும் வரை தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் மூழ்கி இருக்கின்றன. பூத் கமிட்டிக்கு ஆள் போடுவதிலும் பிஸியாக உள்ளன.
எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் பண பலம் பொருந்திய முக்கிய வேட்பாளர்கள் வைட்டமின் 'ப' வை கடைசி நேரத்தில் கொடுத்து மக்களை கவர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புது திட்டம்
ஆனால் முன்பு போல் நேரடியாக பணம் கொடுப்பதில் சிக்கல் இப்போது அதிகமாக உள்ளது. இதற்காக சில வேட்பாளர்கள் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட கணக்குகளை சேகரிக்கப்பதாக புகார்களும் எழுந்துள்ளது. தேர்தல் நாளுக்குள் மொத்தமாக பணம்பட்டுவாடா நடத்த இந்த முறை அரசியல் கட்சியினர் கையாளக்கூடும் என்று கூறப்படுகிறது.

பணம் பட்டுவாடா
ஏனெனில் பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வீடு தேடி வந்து தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் உள்ளதால் மாற்று வழிகளை கட்சிகள் கையாள தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீடாக பணம் பட்டுவாடா நடக்கும் போது அதில் பாதியை கட்சி நிர்வாகிகள் அமுக்கி கொள்வதும். பாதியை மட்டும் தருவதும் என்பதாக இருந்தது.

கொங்கு மண்டலம்
இதனால் தற்போதைய எம்எல்ஏக்கள் உள்படபல்வேறு கட்சி வேட்பாளர்கள் கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் வாக்களார்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. யாரெல்லாம் வாக்களிப்பார்கள், யாருக்கெல்லாம் பணம் கொடுத்தால் வாக்களிப்பார்கள் என்பதை கணக்கெடுத்து கச்சிதமாக பணத்தை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இந்த புகார்கள் அதிக அளவில் உள்ளது.

தடை விதிக்க வேண்டும்
இதையடுத்து ஓட்டுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தப்படுவதால் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தேர்தல் முடியும் வரை தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். இவரது கோரிக்கை ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும் கூகுள் பே உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications