பியூஸ் கோயல் சொன்ன அற்ப சிந்தனைக்கு எடுத்துக்காட்டே இதுதான்.. வெளுத்த சு வெங்கடேசன் எம்பி
சென்னை: கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் "அற்ப சிந்தனை" என்கிற வார்த்தைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும், ஒன்றிய அரசின் இந்த "அற்ப செயலை" வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் பியூஸ் கோயல் கருத்துக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் பதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக ஆளும் திமுக அரசு தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. மாநிலங்கள் அளிக்கும் வரி பகிர்வுக்கு ஏற்ப நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் தமிழக அரசு முன்வைத்து வருகிறது.

இத்தகைய சூழலில் தான், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதாவது, மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை தமிழக அரசு ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தமிழக அரசு இந்த திட்டத்தில் இணைய எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியது பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்திலும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசை கடுமையாக சாடியிருக்கிறார். சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- நிதிப்பகிர்வில் தங்களுக்குரிய நிதியை மாநிலங்கள் கேட்பது அடிப்படை உரிமையே!
தேசிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பதால் தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்துள்ளது ஒன்றிய அரசு. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் "அற்ப சிந்தனை" என்கிற வார்த்தைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசின் இந்த "அற்ப செயலை" வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ”மாநிலங்கள் வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பது என்பது அற்ப சிந்தனை” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருந்த பதிவில், கூறியிருந்தாவது, 'மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை ஏற்காததால், தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு பறித்து, மற்ற மாநிலங்களுக்கு வழங்கி இருக்கின்றனர்.
இதுவரை எந்தவொரு அரசும் அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான நிதியை முடக்கியது இல்லை. தங்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளது. பாஜக அரசின் இந்த செயல் தமிழ்நாடு மீதான அரசியல் பழிவாங்கலுக்கு கல்வி உரிமையை நெரிக்கும் இரக்கமற்ற ஒன்று. தமிழ்நாடு மீதான வெறுப்பின் முகமே மாணவர்களுக்கான நிதியை பறித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு மீண்டும் பாஜக அரசு அநீதியை இழைத்துள்ளது” என்று கூறியிருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications