Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் வரி விதிப்பால் சிறு, குறு தொழில்களுக்கு பெரிய அடி.. நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வாராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், "அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியின் காரணமாக பல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான இண்ணல்களுக்கு ஆளாகியுள்ளன. இதன் விளைவாக வங்கி கடன்களை செலுத்த முடியாமல் அவை வாராக்கடன்களாக மாறும் அபாயம் உள்ளதாக தொழில் முனைவோர்கள் கூறுகின்றனர்.

Madurai MP Su Venkatesan Urges FM Nirmala to Ease Bad Debt Rules for Firms Hit by Trump Tariff

அத்துடன் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45 சதவிகிதம் வரையிலும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்து வருகின்றன.

ஜவுளி, கடல் உணவு, ஆபரணங்கள் ஆகிய துறைகள் அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25 சதவிகித பங்கை கொண்டுள்ளன. இந்த வரி விதிப்பால் இவை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த துறைகளில் குரு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு 70% இருக்கும் அதிக பங்கு உள்ளது. ரசாயன துறையும் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது. அந்த துறையின் ஏற்றுமதியில் குறு - சிறு நடுத்தர தொழில்களுக்கு 40 சதவீதம் பங்கு உண்டு.

தமிழ்நாட்டில் இதன் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. ஏனெனில் இது ஜவுளித்துறை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலம் ஆகும். இவற்றில் பெரும்பாலான அலகுகள் குரு சிறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தலின்படி விநியோகங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் திடீரென கையிருப்புகள் அதிகமாக தேக்கமடைந்து வருகின்றன. நூல் நூர்ப்பு முதல் உடை தயாரிப்பு வரை உள்ள முழு உற்பத்தி சங்கிலியும் இந்த வரிப் போரின் காரணமாக கடந்த மாதத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளை பெறுவது மிகவும் சிரமமானதாக இருக்கிறது. இந்த நிலையில் குறு சிறு நடுத்தர தொழில்கள் வங்கிகளின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக்கி கடன் செலுத்த தவறும் கடன்களை வாரா கடன் வகைக்கு தள்ளக் கூடும் இதன் விளைவாக நிறுவனங்களில் எதிர்கால கடன் பெரும் தகுதியும் பாதிக்கப்படும்.

இந்தச் சூழலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோருகிறேன். இந்திய ரிசர்வ் வாங்கிய இடம் விதிமுறைகளை தளர்த்தவும் இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை வாரா கடன்களாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகிறேன். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு மேற்கண்ட இறக்குமதி வரி உயர்வு பிரச்சனையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+