இது ஒன்றும் கைச்சரக்கல்ல..தேசத்தின் பொக்கிஷம்..பிரசார் பாரதிக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!
பிரச்சார பாரதிக்கு எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: "அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு முடிவெடுத்துள்ளது... பணத்தேவைக்காக விற்க வரலாறு கைசரக்கல்ல.. தேசத்தின் பொக்கிஷம்... ஏலம் விடும் முடிவு கைவிடப்பட வேண்டும்" என்று மத்திய அரசை எம்பி சு.வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"வரலாற்று ஆவணங்களை விற்பது தேசதுரோகம்.. பிரசார் பாரதி அமைப்பின் முடிவை கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு நான் எழுதியிள்ள கடிதத்தின் விபரம் வருமாறு.
தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு (அக்:8) முடிவெடுத்துள்ளது. இவர்கள் ஏலம் விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும். நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.

இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்க கூடும். ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது. இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு
சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை "பணமாக்க" போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது.
இப்படித் தரப்படும் உரிமைகளில் "தனி உரிமைகளும்" (Exclusive rights) அடக்கம். இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல. சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை. கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு. ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன்" என்று அந்த கடிதத்தில் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை தன்னுடைய ட்விட்டரிலும் வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications