சென்னையில் பின்னால் வந்த எமன்.. சிதறிக்கிடந்த எஸ்ஐ மகன், பெண் உடல்.. கொத்தி தின்ற காகங்கள்
சென்னை: சென்னை திருவேற்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி எஸ்ஐ மகனும், பெண் ஒருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். சாலையில் சிதறி கிடந்த உடல் பாகங்களை காகங்கள் கொத்தி தின்றதால், அந்த பகுதி மக்கள் பார்த்து மனம் உடைந்து போயினர்.
மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் மதுரையை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர் உதவி ஆய்வாளராக இருக்கிறார். இவருடைய மகன் 27 வயதாகும் கோபிகிருஷ்ணன் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.

சென்னை திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். அங்கிருந்த படி தினமும் தான் வேலை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சென்று வந்துள்ளார்.
அப்படித்தான் கோபிகிருஷ்ணன் நேற்று மதியம் பைக்கில் சென்றுள்ளார். வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்டதாக கூறப்படுகிறது. அவரை ஏற்றிக்கொண்டு தனது வாகனத்தில் பூந்தமல்லி நோக்கி சென்றுள்ளார். திருவேற்காடு அடுத்த வெற்றிலைதோட்டம் மேம்பாலத்தில் சென்று வாகனத்தில் சென்ற போது, வேகமாக பின்னால் இருந்து வந்த லாரி மோதியது. இதில் கோபி கிருஷ்ணன் மற்றும் அந்த பெண் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
லாரி சக்கரத்தில் சிக்கி கோபிகிருஷ்ணன் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த பெண் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். உடல் பாகங்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்தது. இந்த மோசமான விபத்து குறித்து உடனடியாக ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து குறித்து விசாரித்த போது தான் போலீசாருக்கு இந்த விபத்தில் பலியான பெண், தமிழ்ச்செல்வி (45) என்பதும், வண்டலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கோபி கிருஷ்ணனிடம் 'லிஃப்ட்' கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை உறுதி செய்ய முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே லாரி சக்கரத்தில் சிக்கியதில் கோபி கிருஷ்ணன் மற்றும் தமிழ்செல்வின் உடல்களின் பாகங்களின் தசைகள் சாலையில் ஆங்காங்கே சிதறி இருந்தது. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பிறகும், அங்கு சிதறி கிடந்த உடல் பாகங்களை காகங்கள் கொத்தி தின்றன- இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் மனம் உடைந்து போயினர். இந்த கொடூர விபத்து எஸ்ஐ குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வேகமாக வந்த லாரிகள் பின்னால் இருந்து மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளன. அண்மையில் அடையாறில் ஏற்படுத்திய விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி உயிரிழந்தார். இப்போது எஸ்ஐ மகன் மற்றும் உடன் வந்த பெண் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரண்டு விபத்துக்கும் முக்கிய காரணம், லாரிகள் பின்னால் இருந்து வந்து மோதி விபத்தை ஏற்படுத்தியது தான். சென்னை போன்ற பெருநகரத்திற்குள் லாரிகள் பீக் அவர்ஸில் வரக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அதையும் மீறித்தான் வருகின்றன.வரும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வது அல்லது வேகமாக செல்ல முயற்சிப்பது விபத்திற்கு காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications