மதுரை டூ சென்னை சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில்.. பொங்கல் முடிந்து வருவோருக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு வரும் ஜனவரி 18ம் தேதி (சனிக்கிழமை) அன்று முன்பதிவு இல்லாத பயணிகள் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து ஜனவரி 19ம் தேதி (ஞாயிறு) மாலை 4 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.. பொங்கலுக்கு ஊருக்கு சென்றுள்ளவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல பள்ளிகளுக்கு கடந்த சனிக்கிழமை தொடங்கி வரும் ஞாயிறு வரை கிட்டத்தட்ட 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு அலுவலகங்களை பொறுத்தவரை செவ்வாய்கிழமையான இன்று தொடங்கி வரும் ஞாயிறு வரை ஆறு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள்.

பொங்கல் பண்டிகை முடிந்ததும் வரும் வியாழக்கிழமை தொடங்கி படிப்படியாக பலரும் சென்னைக்கு திரும்புவார்கள். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தீபாவளி பண்டிகையை போல் இந்த முறை பொங்கலுக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது. ஒருவழியாக ஏற்கனவே பொங்கல் பண்டிகை தொடங்கும் முன்பு ரயில் நேற்று பிற்பகல் மதுரை சென்றது. இந்நிலையில் வரும் சனிக்கிழமை அன்று சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஞாயிறு அன்று மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வரும் சனிக்கிழமை (ஜனவரி 18) அன்று சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.45க்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று மதுரைக்கு இரவு 7.15க்கு செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இந்த சிறப்பு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் 8.30 மணி நேரத்தில் சென்றுவிடும்.

அதேபோல் மறுமார்க்கமாக ஜனவரி 19ம் தேதி (ஞாயிறு அன்று) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில் புறப்படுகிறது. இந்த ரயில், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று,இறுதியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு திங்கள்கிழமை அதிகாலை (ஜனவரி 20) 12.45க்கு சென்றடையும். இந்த ரயிலை பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் பயன்படுத்தலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications