மகளிர் உரிமைத்தொகை: சென்னையில் 10 லட்சம் விண்ணப்பங்கள்.. யாருக்கு கிடைக்கும்? ஜெ.ராதாகிருஷ்ணன் பரபர!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வரவுள்ளன. ஜூலை 24 முதல் 500 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் விண்ணப்பம் வழங்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான அனைத்து நடவடிகைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அரசு ஊழியர்கள், ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது என்பது உள்ளிட்ட நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

விண்ணப்பம் வழங்கும் பணிகள்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் இறுதி செய்வார்கள். சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்க தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை முழுமையாக பயன்படுத்த உள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து அவர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்குவார்கள்.
சிறப்பு முகாம்கள்: சென்னையில் வரும் 24 ஆம் தேதி முதல் முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் வழங்கப்படும். கூட்ட நெரிசலை தடுக்கவே டோக்கன் வழங்கப்படுகிறது. ஒரே நாளில் டோக்கன் வாங்க மக்கள் வரவேண்டாம், அடுத்தடுத்து முகாம்கள் நடக்கும்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை இதற்காக செயல்பட இருக்கிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் செயல்படும். தகுதி உடைய பெண்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும்.
சென்னையில் உள்ள 1,417 ரேஷன் கடைகளில் 17.81 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 600 ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குடும்ப தலைவிகளுக்கு உதவ ஒரு அலுவலர் இருப்பார். உரிமைத்தொகை பெற வங்கிக்கணக்கு இல்லையெனில் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3550 மையங்கள்: குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் 1,417 ரேஷன் கடைகள் உள்ளன. இதனால் மொத்தம் 3,550 மையங்கள் அமைக்க முடிவு செய்து உள்ளோம்.
ஜூலை 24ஆம் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும். கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும். இந்த மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications