வெறும் 5 மணி நேரத்தில் ரூ 5000 மகளிர் உரிமைத் தொகை! பிப்.15-க்கு பதில் 13 ஏன்? தமிழக அரசு விளக்கம்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை 15 ஆம் தேதிக்கு பதிலாக இன்றே ரூ 5000 வரவு வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இன்று காலை வந்த ஒரு மெசேஜ் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திடீர்னு 5000 ரூபாய் அக்கவுன்ட்டில் வரவு வைக்கப்பட்டதை பார்த்ததும் பலர் குஷியாகினர்.

இன்னும் சிலர் ஏதாவது தப்பி தவறி அக்கவுன்ட்டுக்கு வந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்டாலின் வழங்கிய ரூ 5000 பணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்திருந்தனர். அதில் மாதம் ரூ 2000 என்று நான் அளித்த அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், பயத்தில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது, பாருங்கள் மக்களே என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
மகளிர் உரிமைத் தொகையும் கோடைக் கால சிறப்பு நிதியும் திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு. நாங்கள் மகளிர் உரிமைத் தொகையாக ரூ 2000 கொடுப்போம் என்றோம். அதைத்தான் ஸ்டாலின் இப்போது அறிவித்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அது போல் தமிழிசை சவுந்திரராஜன், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்... ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை... இது தர்மத்திற்கு எதிரானது." என விமர்சித்திருந்தார்.
அது போல் பாமக அன்புமணியோ, "தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வந்த திமுக அரசு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது." என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எம்பிக்கள் திருமாவளவன், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
தேர்தலை காரணம் காட்டி 5000 ரூபாய் வழங்கப்பட்டது சரி! மாதாமாதம் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் நிலையில் திடீரென இன்று முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் வரவு வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதில் மே மாதம் வரை மட்டுமே இந்த ஆட்சிக்கான அதிகாரம் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.
இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருவதால் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் பிப்ரவரி 14ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும்தான் பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்றே ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications