“எனக்கு தூக்கி வாரிப்போட்டிருச்சு..” மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பால் ஷாக்கான நயினார் நாகேந்திரன்
சென்னை: தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை முடக்க, பாஜக திட்டமிட்டு வருகிறது என்று கூறி, 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000-ஐ 1.3 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் தமிழக அரசு வரவு வைத்தது. இப்படி இருக்கையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கும் கருத்துக்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
மோடி மஸ்தான் வேலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்தான் படிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்பதில் முதலமைச்சர் கை தேர்ந்தவர். காலையில் டிவியை திறந்தவுடன் முதலமைச்சர் வந்தார், ரூ.5000 தருவோம் என்றார், எனக்கு தூக்கி வாரி போட்டுவிட்டது.

மகளிர் உரிமைத் தொகை
ஏற்கெனவே கடந்த 2021 தேர்தலில் ரூ.1,000 தருவோம் என்று சொன்னார். அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஆள் காணவே இல்லை. கடைசியாக நாடாளுமன்ற தேர்தல் வந்து போதுதான் அந்த தொகை வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 28 மாதங்கள் ஆகின. அதிலும் கூட ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. தற்போதுதான் பெரும்பாலான பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ரூ.5000 உரிமைத் தொகை
இப்படி இருக்கையில் ரூ.5,000 கொடுக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவரான எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ.2,000 வழங்குவோம் என்று அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்துதான் திமுக அரசு ரூ.5,000 கொடுத்திருக்கிறது.
கோடைக்கால சிறப்புத் தொகை
மகளிர் உரிமைத் தொகையை பாஜகவினர் தடுத்து நிறுத்த இருப்பதாக சொல்லிக்கொண்டு ரூ.5,000 வழங்கப்பட்டிருக்கிறது. இதை நிறுத்த வேண்டும் எனில் முன்கூட்டியே நாங்கள் நிறுத்தி இருக்கலாமே! அதிலும் இப்போது கொடுக்கப்பட்ட தொகையில் ரூ.2,000 என்பது கோடைக்கால சிறப்பு தொகை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
புதியதாக பழக்கம்
இதுக்கு முன்னர் கூடதான் கோடைகாலங்கள் வந்தன. கடந்த ஆண்டு கோடை காலம் இருந்தது. அதற்கு முன்னரும் கோடை காலம் இருந்தது. அப்போது எல்லாம் யாரும் இந்த நிதியை வாங்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு மட்டும்தான் கோடை காலம் புதியதாக வருவதைப் போன்று, சிறப்பு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் இது தேர்தலுக்கான அச்சாரம்.
இந்த நிதிக்கு பின்னால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மறைக்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம் ஆகிவற்றை மறைக்கவே இந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications