மகளிர் உரிமைத்தொகை.. இனிமேல் ரூ.1000 கிடையாது.. உயர்த்தப்படும் தொகை? அரசின் திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இனி புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தால்.. அந்த விண்ணப்பங்கள் ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம்.

tamil nadu government notification ration magalir urimai thogai

எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


மகளிர் உரிமைத்தொகை உயருகிறது:

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. டெல்லியில் மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் வரை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகியவை இது தொடர்பாக வாக்குறுதி அளித்துள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் இதே தொகை உயர்த்தப்படலாம் என்று தகவல் வருகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டம் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் 1500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு முன்னோடி தமிழக அரசுதான். ஆனால் தமிழ்நாட்டில் ரூ.1000 தான் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. 1500 அல்ல 2000 வரை கூட இந்த தொகை உயர்த்தப்படுவதாக திமுக வாக்குறுதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் 2026ல் நடத்தப்படும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து.. எதிர்க்கட்சிகள் வழங்க போகும் வாக்குறுதிகளை மனதில் வைத்து ஆளும் திமுக அரசு தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதை பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது .

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+