விரிவடைகிறது ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை.. இன்னும் லட்டு லட்டா வருதே தகவல்.. ஸ்டாலின் வரை போன மேட்டர்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து 2 நல்ல செய்திகள் வெளியாகியிருக்கின்றன.. இதனால், விரைவில் இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கும் விரைவில் உரிமைத்தொகை கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது என்றாலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் மீண்டும் இணைக்கப்பட்டனர்.. ஆனால், லோக்சபா தேர்தல் காரணமாக புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன..
விரிவாக்கம்: இதனிடையே, மக்களவைத் தேர்தல் காரணமாகப் புதிதாக ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்ததால் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது தாமதமாகி வந்தது.
நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதற்கான பணிகள் நடைபெறும் எனச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
உதயநிதி இப்படி சொன்னதுமே, உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளர்களுக்கான தகுதி நிபந்தனைகளில் எப்போது தளர்வு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவ தொடங்கிவிட்டது.
புதிய ரேஷன் கார்டு: தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், இதுவரை 2.8 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி ஆரம்பமாகியிருக்கிறது. கடந்த 2 வாரமாக தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வரும்நிலையில், இந்த மாதமே அனைவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது.
அதேபோல, புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்படும்பட்சத்தில், கூடுதலாக இதில், 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.. அதேபோல, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவி, புதிதாகத் திருமணமானவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி செய்தி: இப்படிப்பட்ட சூழலில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து 2 செய்திகள் வெளியாகியிருக்கின்றன.. அதாவது, விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியபோது, "மகளிர் உரிமைத் தொகை ஒரு சிலருக்கு கிடைக்கப்படாமல் இருக்கிறது. இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
ஆயிரம் ரூபாய் பிரச்சனை தான் தற்பொழுது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் ஆயிரம் ரூபாய் கிடைக்காத மகளிர் என்னுடன் உரிமையுடன் சண்டை போடுகிறார்கள். அதனால், அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தேன். அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்" என்றார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
இன்று 1000 ரூபாய்: இந்த தகவல் அனைத்து தரப்பினருமே மகிழ்ச்சியை தந்து வருகிறது.. அதற்கேற்றவாறு, இன்று ஆகஸ்ட் 15ம்தேதி, இந்த மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத்தொகை தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. குடும்ப தலைவிகள் எப்பொழுது 1000 ரூபாய் கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான மகளிர் தொகை 1000 ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படும் என்ற செய்தியை அரசு அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications