மகளிர் உரிமைத்தொகை.. விடுபட்டவர்களுக்கு எப்போது கிடைக்கும்? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மேஜர் அப்டேட்
திருப்பத்தூர்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டே மாதத்தில் அதாவது ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் வரும் 2026 சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, 2031 மற்றும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலிலும் நம்ம ஆட்சி தான் நடக்கும் என்று கூறினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-ஆலங்காயம் ஊராட்சியில் உள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும். குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படும். திருப்பத்தூர் ஆம்பூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும். நல்லகொண்டா பகுதியில் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
தமிழத்தில் சமச்சீராக தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் நகர பகுதிகள் போலவே கிராம பகுதிகளும் வளர்ச்சி பெறுகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் தமிழ்நாட்டின் பங்கு தான். வரும் 2026 சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, 2031 மற்றும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலிலும் நம்ம ஆட்சி தான் நடக்கும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டே மாதத்தில் அதாவது ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications