4 கிலோ தங்கத்தில் சட்டை.. உலகிலேயே அதிக விலை கொண்ட ஷர்ட் இதுதான்! யார் இந்த மகாராஷ்டிரா பங்கஜ்?
சென்னை: உலகிலேயே விலையுயர்ந்த சட்டை இந்தியாவில் தான் உள்ளது. அந்த சட்டை 4 கிலோ தங்கத்தில் செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டையை வைத்திருப்பவர் அம்பானி, அதானி இல்லை.. ஒரு அரசியல்வாதி என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை. இந்த சட்டையை வைத்திருக்கும் அரசியல்வாதி யார்? தற்போது அந்த சட்டையின் மதிப்பு என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டில் மிகப்பெரிய பணக்காரர்களாக அதானியும், முகேஷ் அம்பானியும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் தான் நம் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் 2 இடங்களை பிடித்து வருகின்றனர்.

இவர்கள் 2 பேரும் சொந்தமாக ஏராளமான தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் கூட பொதுவெளியில் எப்போது கோட் - சூட் அணிந்து தான் வலம் வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி உலகளவில் பெரும் பணக்காரராக உள்ள டெஸ்லாவின் உரிமையாளர் எலான் மஸ்க் உள்பட அனைவரும் தங்களை கோட் சூட் அணிந்தே அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இப்படி இவர்கள் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் கூட அவர்களிடம் இல்லாத ஒரு பெரிய சாதனையை இந்திய அரசியல்வாதி வசம் உள்ளது. அதாவது உலகில் மிகவும் விலையுயர்ந்த சட்டை என்பது இந்திய அரசியல்வாதி ஒருவரிடம் தான் இருக்கிறது. அந்த அரசியல்வாதியின் பெயர் பங்கஜ் பரேக். இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை நடத்தி வருகிறார்.
இந்த மனசு தான் சார் கடவுள்.. சைக்கிளில் உணவு டெலிவரி செய்த இளைஞர்.. வாடிக்கையாளர் கொடுத்த பரிசு!
மேலும் பங்கஜ் பரேக் அரசியல்வாதியாகவும் இருக்கிறார். இவர் மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் 4.1 கிலோ எடை கொண்ட தங்கத்தில் சட்டை செய்து அணிந்து வருகிறார். இந்த சட்டையை அவர் கடந்த 2014ம் ஆண்டில் முதல் முறையாக அணிந்தார். அப்போது அதன் மதிப்பு என்பது 98 லட்சத்து 35 ஆயிரத்து 99 என்று இருந்தது.
தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்த சட்டையின் மதிப்பு என்பது ரூ.2 கோடியை தாண்டி உள்ளது. இந்த சட்டை தான் உலகில் மிகவும் விலையுயர்ந்த சட்டையாக உள்ளது. இந்த சட்டையை பங்கஜ் பரேக் தனது பிறந்தநாள் உள்பட சில முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இந்த சட்டை மூலம் பங்கஜ் பரேக் உலக சாதனைகள் இடம்பெறும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
"14 நாள் லீவு".. இந்த மாதம் வங்கிக்கு போறீங்களா? தமிழகத்தில் எந்தெந்த தினங்களில் விடுமுறை தெரியுமா?
இந்த சாதனைக்கு சொந்தக்காரரான பங்கஜ் பரேக் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர். இவர் ஆயத்த ஆடை தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில் தங்கத்தின் மீது அதிக மோகம் உள்ளது. சிறுவயது முதலே தங்க நகைகள் அணிய அதிக காட்டினார்.இதற்காக புதிய புதிய டிசைன்களில் தங்க நகைகளை வாங்கி அணிவார். இன்னும் சொல்லப்போனால் அவரது திருமணத்தில் மணப்பெண்ணை விட பங்கஜ் பரேக் தான் அதிகமாக தங்க நகைகளை அணிந்தார் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications