கொழுந்தனின் உதவியுடன் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்.. யாரிந்த பெண்? அணையை சுற்றி வளைத்த போலீஸ்
சென்னை: கள்ளக்காதல் அட்டகாசங்கள் பெருகி வரும் நிலையில், குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.. பல சமயங்களில் குடும்பத் தகராறுகள் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.. இதனால் தம்பதிகளின் பச்சிளம் குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்து, எதிர்காலத்தையே தொலைத்து விடுகிறார்கள். அந்தவகையில் மகாராஷ்டிராவில் 2 குழந்தைகள் தங்கள் பெற்றோரை காணாமல் கண்ணீர் சிந்தி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ளது பத்னாபூர் என்ற தாலுகா.. இங்குள்ள சம்தானா என்ற கிராமத்தில் பரமேஸ்வர் என்பவர் வசித்து வருகிறார்..

இவரது மனைவி பெயர் மனிஷா.. இவருக்கு 25 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்... இந்நிலையில, பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார்..
மாயமான கணவர்
இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், பரமேஸ்வரை பல இடங்களில் தேடினார்கள்.. எங்குமே அவர் கிடைக்கவில்லை. இதனால் போலீசுக்கு ஓடிய மனிஷா, தன்னுடைய கணவரை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு புகார் தந்தார்..
போலீசாரும் இந்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மாயமான பரமேஸ்வரை தீவிரமாக தேடி வந்தனர். எனினும், போலீசாருக்கு இந்த விசாரணையில் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.
அணையில் மிதந்த உடல்
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள அணையில் இருந்து ஆணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதனால் உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு, இறந்தவர் யார் என்ற விசாரணயை மேற்கொண்டனர். அப்போதுதான் அது மாயமான பரமேஸ்வர் என்பது தெரியவந்தது..
யாராவது அரை கொன்று, அதற்கு பிறகு அணையில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். எனவே, பரமேஸ்வரை கொன்றது யார்? என்று அடுத்த விசாரணையை விரிவுபடுத்தினார்கள்..
மனிஷாவின் கொழுந்தன்
அந்தவகையில், கணவரை காணவில்லை என்று புகார் தந்த மனிஷாவிடமும் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரது வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் அதிகமானது. எனவே, தங்கள் பாணி விசாரணையை போலீசாரிடம் மேற்கொண்டனர். அப்போதுதான், மனிஷாவுக்கும், கணவரின் இளைய சகோதரர் தியானேஸ்வர் என்பவருக்கும் கள்ள உறவு இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வர், தம்பியை கண்டித்து உள்ளார்.. பிறகு மனைவிக்கும் அறிவுரை சொல்லி உள்ளார்.. இதனால் கடுப்பான கள்ளக்காதல் ஜோடி, உறவுக்கு தடையாக உள்ள பரமேஸ்வரை கொன்றுவிட முடிவு செய்தனர்.
கள்ளக்காதல் ஜோடி
இதற்காக கடந்த மாதம் 15ம் தேதி இரவு தியானேஸ்வர், தன்னுடைய அண்ணனின் தலை மீது பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளார்.. உடனே மனிஷா ஒரு துணியால், கணவரின் கழுத்தை இறுக்கி நெரித்துள்ளார்..
இதில் பரமேஸ்வர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்துள்ளார்.. பிறகு கள்ளக்காதல் ஜோடி இருவரும், பரமேஸ்வரின் சடலத்தை ஒரு பாலித்தீன் பையில் சுற்றி, அதில் கல்லை கட்டி அணையில் வீசியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, போலீசார் மனிஷாவையும், தியானேஸ்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
செல்போனில் மெசேஜ்
பரமேஸ்வரின் இளைய தம்பிதான் தியானேஸ்வர்.. இவருக்கும் திருமணமாகிவிட்டது.. பரமேஸ்வர் வசித்து வந்த அதே தெருவில்தான் இவரும் வசித்து வந்துள்ளார்.. அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதையும் வழக்கமாக வைத்திருந்தாராம்.. அப்போதுதான் அண்ணி மனிஷாவுடன் தியானேஸ்வருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிலசமயம் அண்ணன் வீட்டில் இருந்தாலும்கூட, மனிஷாவுடன் தியானேஸ்வரிடம் போனில் பேசி வந்திருக்கிறார். அத்துடன் தன்னுடைய கணவரிடமும் மனிஷா பேசுவதை தவிர்த்து வந்தாராம்.. 2 குழந்தைகளையும் சரிவர கவனிக்காமல் இருந்து வந்திருக்கிறார்.
இதற்கு பிறகுதான் மனைவி மீது சந்தேகமடைந்த பரமேஸ்வர் அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது, மனிஷா - தியானேஸ்வர் இருவரின் மெசேஜ்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. அதற்கு பிறகே இருவரையும் கண்டிக்க போய், கொலை வரை நடந்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications