"நீங்கள் எந்த ஜாதி, மதம்?" பார்வையற்ற ஆசிரியரிடம் மறைமுகமாக "கேட்ட" மகாவிஷ்ணு
சென்னை: மாற்றுத்திறனாளிகளை கேவலப்படுத்தி மகாவிஷ்ணு பேசியதை நான் கண்டித்த போது அவர் எனது பெயரையும் ஜாதியையும் மதத்தையும் தெரிந்து கொள்ள முற்பட்டார் என சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் முன் பிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மீக சொற்பொழிவாளர் என கூறிக் கொள்ளும் மகாவிஷ்ணு பேசியது பூதாகரமாகியுள்ளது.

இதுகுறித்து அந்த சொற்பொழிவை கேட்டு அதிர்ந்த அதை தடுத்து நிறுத்திய மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கூறுகையில் நடைமுறைக்கு ஒவ்வாத முற்பிறவி, மறுபிறவி குறித்தெல்லாம் மகாவிஷ்ணு பேசினார். எனக்கு அவரது கருத்துகளில் உடன்பாடு இல்லை, பிடிக்கவும் இல்லை. ஆகையால் இதெல்லாம் இங்கு பேசக் கூடாது என சொன்னேன்.
முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவாகத்தான் நாம் பார்வையில்லாமல், கை, கால்கள் குறைபாடுடன் பிறக்கிறோம் என சொன்னார். அது தனிப்பட்ட முறையில் எனக்கு வேதனையை அளித்தது. அமைச்சர் அன்பில் மகேஷ், "நான் தைரியமாகவும் துணிச்சலாகவும் கேள்வி கேட்டதாக" என்னை பாராட்டினார்.
ஒட்டுமொத்தமாக மாற்றுத்திறனாளிகள் சமூகத்தையே அவர் கேவலப்படுத்திவிட்டார். முற்பிறவியில் நாம் என்ன செய்தோம் என்பதே தெரியாது. அது போல் முற்பிறவி என்பது உண்மையா என தெரியாது. அதை அடிப்படையாக வைத்து இந்து மத கொள்கைகளை அவர் பேசியது போல் எனது மனதிற்கு பட்டது.
"ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து நீங்கள் பேசுவதை நான் அனுமதிக்க முடியாது" என சொன்னேன். அதற்கு பதிலாக அவர் என் பெயர் என்ன, என் மதம், ஜாதியை தெரிந்து கொள்ள முற்பட்டார். இதை நான் தெரிவிக்கவே இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நான் இதுகுறித்து மேலும் பேச முடியாது என சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் அரசு பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி முடிவு செய்தார்.
இதற்காக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் கடந்த வாரம் வரவழைக்கப்பட்டார். அவர் திடீரென சம்பந்தமே இல்லாமல் மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. அதாவது மகாவிஷ்ணு பேசுகையில் மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது.
போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள். அது போல் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் ஒருவரது இயலாமையை பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், மகாவிஷ்ணுவின் பேச்சை கேட்டு அதிர்ந்து போய் கடுமையாக எதிர்த்துள்ளார். அப்போது அவரை , மகாவிஷ்ணு, அறிவற்றவர் என விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையானது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என கடும் கண்டனத்தை தெரிவித்தனர். படிக்கும் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை கலக்கும் விதமாக பேசுவதா என மகாவிஷ்ணுவுக்கு கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்த விளக்கத்தில் என்ன தலைப்பு கொடுக்கப்பட்டது, எந்த நிகழ்ச்சிக்காக மகாவிஷ்ணு வரவழைக்கப்பட்டார் என கேள்விகளை எழுப்பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர் தமிழரசியும், சைதாப்பேட்டை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications