74 வயசிலும் "டார்ச்சர்".. மாமனாரின் காதிலேயே சுட்ட ஜெயமாலா கைது.. ஆக்ரா ரோட்டில் நடந்த சேஸிங்..!

கொலையாளிகளை சுட்டுக் கொன்ற ஜெயமாலா கைதானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி ஆக்ரா ரோட்டில் போலீசாரை கண்டதுமே தப்பித்து ஓடிஉள்ளார் ஜெயமாலா.. அவர் பயந்து ஓடுவதை வைத்துதான், சந்தேகத்தின்பேரில் விரட்டி சென்று பிடித்துள்ளனர் போலீசார்.. தற்போது 3 பேரை கொன்ற ஜெயமாலா கைதும் ஆகி உள்ளார்.

சென்னை சவுகார்பேட்டையில் சொத்துக்காக மாமனார், மாமியார், கணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் ஜெயமாலா என்ற பெண்.. ஜீவனாம்சம் கோரி கோர்ட்டில் கேஸ் நடந்து வரும் நிலையில், மொத்த சொத்தையும் குழந்தைகள் பேரில் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

ஜீவனாம்சமாக, 7 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள்.. 1 பைசா கூட தர முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், துப்பாக்கியை எடுத்து 3 பேரையும் சுட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.

 நெற்றிப்பொட்டு

நெற்றிப்பொட்டு

இதில் மாமனாரை மட்டும் காது வழியாக சுட்டு கொலை செய்துள்ளார்.. மற்றவர்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.. நிறுத்தி நிதானமாக ஒவ்வொருவரையும் 5 முறை சுட்டிருக்கிறார் ஜெயமாலா. இது சம்பந்தமான விசாரணையில் இறங்கிய நம் போலீசார், ஜெயமாலா அண்ணன் உட்பட 3 குற்றவாளிகளை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அப்போது, ஜெயமாலா அண்ணன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் 2 விஷயங்கள் வெளியானது.. ஒன்று, மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.. மாமனாருடன் சேர்த்து, வீட்டில் உள்ள சொந்தக்காரர்களும் செக்ஸ் டார்ச்சர் தந்திருக்கிறார்கள்.. இதை கணவன் ஷீத்தலும் கண்டும் காணாமல் இருந்திருக்கிறார்.

 கல்யாணம்

கல்யாணம்

அதற்கு காரணம், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவராம்... உடல்நலமும் பாதிக்கப்பட்டவராம்.. இதை மறைத்து ஜெயமாலாவை அவருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர்... இந்த பாலியல் தொல்லையைதான் தன் வீட்டில் சொல்லி அழுதுள்ளார் ஜெயமாலா.. இதற்கு பிறகே, அவர்களை குடும்பத்துடன் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.. சொத்து பிரச்சனைக்காகவே கொலைகள் நடந்தது என்பது போய், செக்ஸ் டார்ச்சரும் ஒரு காரணம் என்பது தெரியவந்தது.

 தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகவே தப்பிச் சென்ற ஜெயமாலாவை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறினர்.. இறுதியில் வேறு மாநிலத்துக்கு தப்பி சென்றிருக்க கூடும் என்ற சந்தேகத்தில், முக்கிய மாநிலங்களில் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.. அதற்காக ஜெயமாலா போட்டோக்களையும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

 அதிரடி கைது

அதிரடி கைது

இதனிடையே, ஜெயமாலா உட்பட 3 பேரும் டெல்லியில் உள்ள ஆக்ரா ரோட்டில் நடந்து கொண்டிருந்திக்கிறார்கள்.. அது ஜெயமாலா என்று முதலில் போலீசாருக்கு தெரியாது.. சாதாரணமாக விசாரிக்க முயலும்போதுதான், போலீசாரை பார்த்ததுமே ஜெயமாலா தப்பி ஓடி உள்ளார்.. அதன்பிறகு சுதாரித்து கொண்ட போலீசார், பின்னாடியே விரட்டி சென்று ஜெயமாலா, விலாஷ், ராஜி ஷிண்டே ஆகிய 3 பேரையுமே சுற்றி வளைத்து கைது செய்துவிட்டனர்.

 துப்பாக்கிகள்

துப்பாக்கிகள்

இதற்கு முன்னரும், மாமனார் குடும்பத்தை தீர்த்து கட்ட 2 முறை முயற்சி செய்திருக்கிறார் ஜெயமாலா.. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அவர்களை கொல்ல ஜெயமாலா முயன்றார்... ஆனால், சந்தர்ப்பம் சரியாக அமையாததால்தான், நவம்பர் 11 அன்று கொலைகளை செய்தார். 2 துப்பாகிகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. சுட்டால், சத்தம் அவ்வளவாக கேட்காத சைலண்ட் துப்பாக்கிகளாம்..தற்போது தமிழக போலீஸார் டெல்லி சென்று, அங்கு டிரான்சிட் வாரண்ட் வாங்கி கொண்டு, 3 பேரையும் சென்னை அழைத்து வருவார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+