"ஊர்க்குருவி பருந்தாகாது”.. அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? மைத்ரேயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
சென்னை: தமிழக அரசியலில் பாஜக - அதிமுக - பாஜக என பல முறை கட்சி மாறிய மைத்ரேயன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார் மைத்ரேயன்.
முன்னாள் எம்பியாகவும், அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் மைத்ரேயன். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள மைத்ரேயன், இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார். ஏற்கனவே பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவி, அதன்பிறகு மீண்டும் பாஜகவுக்கு சென்று, அங்கிருந்து அதிமுகவுக்கு தாவி தற்போது திமுகவில் இணைந்துள்ளார் மைத்ரேயன்.
திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன், "முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. கல்வி, சமூதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக இருப்பது மத்திய அரசு அறிக்கையில் தெளிவாக இருக்கிறது.
கருணாநிதியின் மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனால், ஸ்டாலினின் சிப்பாயாக திமுகவில் இணைந்துள்ளேன். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டும் ஸ்டாலின்தான் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றுவார்.
வருகின்ற தேர்தல் 2 ஆம் இடத்துக்கானது. அதிமுகவின் போக்கு சரியாக இல்லை. பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணி ஆட்சி, குறைந்தபட்ச செயல்திட்டம் என்று அமித் ஷா கூறியுள்ளார். அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒருசிலர் திட்டமிட்டு கட்சியை கைப்பிடியில் வைத்திருக்கிறார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ளாததால் அதிமுகவில் இருந்து விலகியுள்ளேன்.
காசு கொடுத்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தை கண்டு, தன்னை ஒரு எம்.ஜி.ஆர் போலவும், அம்மையார் ஜெயலலிதா போலவும் நினைத்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு ஒரே ஒரு உதாரணம், உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
திராவிட கட்சிகளை பொறுத்தவரை கூட்டணியை முடிவு செய்வது அவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அதிமுக கூட்டணியை முடிவு செய்யும் சுவிட்ச் டெல்லியில் இருக்கிறது. டெல்லிக்கு அதிமுக தலைமை கட்டுப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் பங்கு குறித்து மக்கள் யோசிப்பார்கள். திமுக ஆட்சி தொடர்வதற்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications