Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயருகிறது.. வீடு, நிலம் வாங்குவோர் கவனத்துக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முத்திரைத் தாள் கட்டணம் தமிழகத்தில் உயருகிறது. 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாக உயருகிறது.இதேபோல் 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் உயருகிறது.

தமிழக சட்டசபையில் முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் இன்று நிறைவேறி உள்ளது. இதன்படி 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாக உயருகிறது

நிறுவன ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

major announcement for land registration: Stamp duty to rise in Tamil Nadu

சரி முத்திரைத்தாள் கட்டணம் உயர்வது சரி, முத்திரைத்தாள் என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

முத்திரைத்தாள் என்பது ஒரு பரிவர்த்தனை நடக்கும் போது அரசாங்கத்திற்கு வரியாக செல்லும் பணம் முத்திரைத்தாள் வழியாக அரசின் கருவூலத்திற்கு செல்லும். இதைத்தான் முத்திரைத்தாள் என்று அழைக்கிறார்கள்.

முத்திரைத்தாள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது: குத்தகை பத்திரம், வீடு கட்டுமான ஒப்பந்தம், பத்திரம், கிரையம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரங்களில் பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணங்களை மக்கள் கட்டுவார்கள். அதன் வழியாக இருவருக்கும் இடையே பணபரிமாற்றம் நடைபெறும். இதற்குத்தான் முத்திரைத்தாள் பயன்படுகிறது.

முத்திரைத்தாள் கட்டணம் பத்திரங்களுக்கு பத்திரம் வேறுபடும். பத்திரப்பதிவு செய்யும் போது முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவாளர் கட்டணம் என்று இரண்டு கட்டணமும் பத்திரம் பதிவு செய்பவர் கட்ட வேண்டும். இதுதான் தற்போது உள்ள நடைமுறை.

வீடு ஒத்தி பத்திரங்களுக்கு மற்றும் பொதுவான பத்திர விஷயங்களுக்கு 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் தான் அதிகமான பயன்படுத்தப்படுகிறது. இனி இந்த கட்டணம் 100 ரூபாய் பாண்ட் பேப்பர் இனி 1000 ரூபாய் ஆக உயருகிறது. இதேபோல் 20 ரூபாய் பாண்ட் பேப்பர் இனி 200 ரூபாய் ஆகிறது.

major announcement for land registration: Stamp duty to rise in Tamil Nadu

அண்மையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்பட்ட போதிலும், வழிகாட்டி மதிப்பு 2017ம் ஆண்டுக்கு முந்தைய நிலையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் பத்திரப்பதிவு கட்டணம் உயர்ந்தது. தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதுபற்றி கூறுகையில், " 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்" என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

வழிகாட்டி மதிப்பு மாற்றியமைக்கப்பட்டதால் வழக்கத்தைவிட பத்திரப்பதிவு செலவு தற்போது அதிகமாகி உள்ளது. இந்நிலையில் தற்போது முத்திரைத்தாள் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பத்திரப்பதிவுக்கான செலவு கணிசமாக அதிகரிக்கும். வழிகாட்டி மதிப்பு தற்போதைய நிலத்தின் மதிப்புக்கு மாற்றினால், மேலும் பத்திரப்பதிவுக் கட்டணமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+