ஆக்சன் பறக்கும்.. மின்சார வாரியத்திற்கு போன முக்கிய உத்தரவு.. செந்தில் பாலாஜி அதிரடி.. குட்நியூஸ்
அத்தியாவசிய பணிகளில் முக்கியமான ஒரு பணிதான் மின்சார ஊழியர் பணி.
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பணி தொடர்பாக பல்வேறு விதிகளை அரசு நிர்ணயம் செய்து வருகிறது. முக்கியமாக அரசு ஊழியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பது, அடிக்கடி தாமதமாக வருவது தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு விதித்து வருகிறது.
சமீபத்தில் கூட பள்ளிக்கு வரமால் அடிக்கடி விடுப்பு எடுக்கும், நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக லிஸ்ட் எடுத்து அனுப்ப கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
முக்கியமாக பள்ளிக்கு நீண்ட காலமாக பள்ளிக்கு வராமல் லாங் லீவில் இருக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

விடுமுறை
அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பலர் இப்படி விடுமுறை எடுப்பது வழக்கம் ஆகி உள்ளது. பள்ளிகளுக்கு செல்லாமல் ஆசிரியர்கள் பலர் மெடிக்கல் லீவ் எடுக்கும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். உடல் நிலையை காரணம் காட்டி பலர் லாங் லீவ் எடுப்பதும் வழக்கம் ஆகி உள்ளது. இப்படி லாங் லீவ் எடுக்கும் ஆசிரியர்களால்தான் மாணவர்களின் படிப்பு கெடுகிறது. இதையடுத்து அவர்களின் லிஸ்ட் வாங்கப்பட்டு உள்ளது. இந்த லிஸ்டை வைத்து ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் அந்த ஆசிரியர்கள் வருமானத்தில் குறைப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஒழுங்கு நடவடிக்கை
தற்போது அதேபோல் மின்சார வாரியமும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக வெளியிடப்பட்டு உள்ள துறை ரீதியான அறிவிப்பில், மின்சார வாரிய துறையில் தாமதமாக வரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகளில் முக்கியமான ஒரு பணிதான் மின்சார ஊழியர் பணி. இவர்கள் நேரத்திற்கு பணிக்கு வர வேண்டியது கட்டாயம். ஆனால் மின்சார ஊழியர்கள் பலர் தாமதமாக பணிக்கு வருவதாக புகார்கள் சென்றுள்ளது. காலை 9 க்கு வருவதற்கு பதிலாக 11- 12க்கு கூட வருவதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை
இதனால் மின்சார வாரிய பணிகள் முடங்குகின்றன. காலை நேரத்தில் எங்காவது மின்சார பிரச்சனை ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய முடியாமலும் போகிறது. இன்னும் சிலர் மின்சார வாரிய அலுவலகத்தில் இருக்கும் பணிகளை கூட சரியாக செய்வது இல்லை என்று புகார் சென்றுள்ளது. இதையடுத்தே தற்போது மின்சார வாரிய துறையில் தாமதமாக வரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை இவர்கள் மேல் எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆதார்
தற்போது மின் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற பக்கத்தில் இதை எளிதாக மேற்கொள்ள முடியும். ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களை கொடுக்கலாம். வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம். ஆனால் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும். நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். அதாவது நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கையும் நீக்க முடியும். புதிதாக அந்த வீட்டிற்கு வருபவர்கள் கணக்கை சேர்த்துக்கொள்ள முடியும். இதுதான் விதி. இதற்காக நேரடி முகாம்கள் நடந்து வருகின்றன. ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மின்சார கணக்கில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்படுவது தவறு. ஆன்லைனில் கட்டணம் செலுத்த மட்டுமே ஆதார் விவரங்கள் தேவை. மற்றபடி நேரில் கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை இல்லை. மானியம் பெறும் பயனர்களை கண்டறிய ஆதார் விவரம் தேவை என்பதால், அதற்காக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்காக ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

எத்தனை பேர்
இதுவரை 2.62 கோடி பேர் மட்டுமே ஆதாரை இணைந்துள்ளனர். முன்னதாக இதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜனவரி 31 வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிய உள்ள நிலையில் ஆதார் இணைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த கால அவகாசம் மேலும் பிப்ரவரி 28க்கு மேல் நீட்டிக்கப்படாது என்றே கூறப்படுகிறது. மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க யாரும் பணம் வாங்க கூடாது. அதிகாரிகள் யாரும் மக்களிடம் கட்டணம் வசூலிருக்க கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications