அடிதூள்.. மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன அன்பில்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட மேஜர் உத்தரவு.. சூப்பர்!
மாணவ, மாணவியர் இடையே இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தனியார் பள்ளிகளின் தரத்தை விட அரசு பள்ளிகளின் தரம் புதிய உயரத்தை அடைய தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பள்ளி கல்வித்துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கலைநிகழ்ச்சிகள்
தனியார் பள்ளிகளில் மட்டுமே முன்பெல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ஆனால் அதை முறியடிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதன் மூலம் மாணவர் , மாணவியர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்தது. பல சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆனார்கள். இந்த கலைநிகழ்ச்சிகள் பெரிய அளவில் கவனம் பெற்றது. இதில் சிலர் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கும் அளவிற்கு கவனம் பெற்றனர். இந்த நிலையில்தான் பள்ளிகல்வித்துறை சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று மாணவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உதவித்தொகை
அதன்படின் தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி 25% இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தனியார்
அவர்களும் தனியார் பள்ளிகளில் சம வாய்ப்பு வழங்குவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்து இருக்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான 25% இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20ம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு ஏழை மாணவர்களுக்கு மட்டுமேபொருந்தும் . தனியார் பள்ளிகளில் படிக்க ஆசை உள்ள, ஆனால் வசதி இல்லாத மாணவ, மாணவியர் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

பள்ளி கல்வித்துறை
சமீபத்தில்தான் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. பள்ளிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுக்கும், நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக லிஸ்ட் எடுத்து அனுப்ப கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. முக்கியமாக பள்ளிக்கு நீண்ட காலமாக பள்ளிக்கு வரால் லாங் லீவில் இருக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பலர் இப்படி விடுமுறை எடுப்பது வழக்கம் ஆகி உள்ளது. பள்ளிகளுக்கு செல்லாமல் ஆசிரியர்கள் பலர் மெடிக்கல் லீவ் எடுக்கும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். உடல் நிலையை காரணம் காட்டி பலர் லாங் லீவ் எடுப்பதும் வழக்கம் ஆகி உள்ளது. இப்படி லாங் லீவ் எடுக்கும் ஆசிரியர்களால்தான் மாணவர்களின் படிப்பு கெடுகிறது. இதையடுத்து அவர்களின் லிஸ்ட் வாங்கப்பட்டு உள்ளது. இந்த லிஸ்டை வைத்து ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் அந்த ஆசிரியர்கள் வருமானத்தில் குறைப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications