அரசியல் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. திமுகவிற்கு இதுவரை இல்லாத சிக்கல்.. ஸ்டாலின் சுதாரிக்கணும்
சென்னை: பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்யக்கோரி ஆசிரியர் இயக்கங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சென்னை DPI வளாகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்களை வழியிலேயே போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த லோக்சபா தேர்தலிலேயே இது திமுகவிற்கு எதிராக இருந்தது.

திமுக அரசு ஊழியர்கள்: கடந்த லோக்சபா தேர்தலிலேயே, அதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.
வாக்குகள் கிடைக்கவில்லை: அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும் வயதில் மூத்தவர்களும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வழி வகை உண்டு. அந்த வகையில், முதியவர்கள் வாக்களித்தனர். எண்ணிக்கையின்படி இது மிக குறைவு. ஆனால், தேர்தல் பணிகளில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் முழுமையாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 2,48,416. இதில் திமுக கூட்டணிக்கு 1,11,150 வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 62,707 வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 50, 241 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 24,318 வாக்குகளும் கிடைத்துள்ளன.
பொதுவாக, திமுக 95 சதவீத வாக்குகளும், மீதமுள்ள 5 சதவீத வாக்குகள் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் கிடைக்கும். அதனால் திமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும், அடுத்த நிலையில் வருகிற அதிமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும் இடைவெளி பெரிதாக இருக்கும். ஆனால், இந்த முறை பதிவான தபால் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது.
திமுகவின் அரசியல் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை. அதேபோல, தபால் வாக்குகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக இந்த முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் பாஜக வந்துள்ளது.
பழைய பென்ஷன்; அதோடு பழைய பென்ஷனும் அரசு அதிகாரிங்களுக்கு இதுவரை கொடுக்கப்படவில்லை. அரசு ஊழியர்களின் பல கால கோரிக்கை இது.. இதை இன்னும் நிறைவேற்றவில்லை.
இப்படி இருக்கத்தான்.. பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்யக்கோரி ஆசிரியர் இயக்கங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சென்னை DPI வளாகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்களை வழியிலேயே போலீசார் கைது செய்தனர்.
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் அரசு இதை செவி சாய்க்கவில்லை. சென்னை DPI வளாகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்களை வழியிலேயே கைது செய்த போலீசார் காரணமாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவிற்கு இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பிரஷராக மாறி உள்ளது. அரசு ஊழியர்களின் ஆதரவை இழக்கும் சிக்கல் கூட திமுகவிற்கு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications