சென்னையின் முக்கிய ஏரியாவில்.. மூடப்பட்ட பெரிய பேருந்து நிலையம்.. ஸ்டன் ஆன பயணிகள்.. என்ன ஆனது?
சென்னை: சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மந்தைவெளி பேருந்து நிலையம் நேற்று முதல் மூடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, அங்கிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும் மயிலாப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு புதிய இடங்களிலிருந்து இயக்கப்படவுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, மந்தைவெளி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய மெட்ரோ நிலையம் மற்றும் ஆர்.கே. மடம் சாலைக்கு இருபுறமும் இரண்டு பெரிய வணிக-அலுவலக வளாகங்களும் கட்டப்படவுள்ளன.

சென்னையில் மூடப்படும் பேருந்து நிலையம்
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநரின் உத்தரவின்படி, சில வழித்தடங்களின் தொடக்கப் புள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, 21, 41D, S 17, 49K மற்றும் S5 ஆகிய வழித்தடப் பேருந்துகள் மந்தைவெளி MRTS ரயில் நிலையம் அருகே உருவாக்கப்பட்டுள்ள புதிய இடத்திலிருந்து புறப்படும்.
வழித்தடம் 49F, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மேலும், 12M மற்றும் 5B ஆகிய வழித்தடப் பேருந்துகள் மயிலாப்பூரில் உள்ள சீனிவாச சாஸ்திரி ஹால் அருகே உள்ள லஸ் கார்னரிலிருந்து புறப்படும். மாதாந்திர பயணச்சீட்டுகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சலுகை அட்டைகள் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனையில் வழங்கப்படும்.
சென்னை தி நகர் பேருந்து நிலையம்
அதேபோல் சென்னை மாநகரத்தின் முக்கியமான பகுதியான தியாகராய நகரில் (டி. நகர்) அமைந்துள்ள பேருந்து நிலையம், பழமையான மற்றும் பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. முக்கியமான பிரீமியம் இடமாக இருந்தும் இங்கே பேருந்து நிலையம் சரியாக இல்லை. தற்போது, இந்த பேருந்து நிலையத்தை புதுப்பிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) 254 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.
1.97 ஏக்கர் நிலப்பரப்பில், இங்கே ஐந்து மாடி வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதில் தங்கும் விடுதிகள், கடைகள், கூட்டாக பணிபுரியும் இடங்கள் (co-working spaces) மற்றும் நூலகம் ஆகியவை அடங்கும். பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு, முன்மொழியப்பட்ட வணிக வளாகத்தின் தரை தளத்தில் தொடர்ந்து செயல்படும். தற்போது, இந்த வளாகத்தில் இருந்து பிராட்வே மற்றும் தாம்பரம் உட்பட முக்கிய இடங்களுக்கு 60 பேருந்துகள் மூலம் தினமும் 300க்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மாறுகிறது தி நகர் பேருந்து நிலையம்
போதுமான பேருந்து நிறுத்துமிடங்கள் இல்லாதது, MTC ஊழியர்களுக்கான ஓய்வு அறையில் வசதிகள் இல்லாதது, பூட்டப்பட்ட பெண்கள் காத்திருப்பு அறைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு அறைகள், பயணிகளுக்கு போதுமான இருக்கைகள் இல்லாதது ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. முன்மொழியப்பட்டுள்ள ஐந்து மாடி வணிக வளாகத்தில் 83,765 சதுர அடி பரப்பளவில் சில்லறை விற்பனை கடைகளும், 18,471 சதுர அடி பரப்பளவில் உணவு கூடங்களும், 7,868 சதுர அடி பரப்பளவில் நூலகமும், 93 தங்கும் விடுதி அறைகளும், அலுவலக இடங்களும் இருக்கும்.
இந்த திட்டத்தின் மதிப்பு 254 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை MTC ஏற்கனவே தயாரித்து தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. தற்போது, CMDA இந்த திட்டத்தை MTC நிலத்தை கையகப்படுத்தி செயல்படுத்த உள்ளது.
MTC நிர்வாக இயக்குனர் டி. பிரபுசங்கர் கூறுகையில், சீமாபுரம் (5 ஏக்கர்), அத்தாந்தாங்கல் (10 ஏக்கர்), மொரை (10 ஏக்கர்), வரதராஜபுரம் (4.5 ஏக்கர்) மற்றும் குத்தம்பாக்கம் (5 ஏக்கர்) ஆகிய ஐந்து இடங்களில் MTCக்கு 125 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை CMDA வழங்கியுள்ளது. விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின்படி, வணிக வளாகத்தின் அனைத்து மாடிகளும் 100% ஆக்கிரமிக்கப்பட்டால், வாடகை வருவாய் மட்டும் மாதத்திற்கு பல கோடிகளை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை பேருந்துகள் நிற்கும்
CMDA 75 பேருந்துகளை நிறுத்தும் வகையில் பேருந்து நிறுத்துமிடங்களை உருவாக்கும். தற்போதுள்ள முறையால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, பேருந்து நிறுத்துமிடங்கள் zig-zag முறையில் அமைக்கப்படும். தரை தளத்தில் ATMகள், டிக்கெட் கவுண்டர்கள், தகவல் மையங்கள், 5,500 சதுர அடி பரப்பளவில் பயணிகள் காத்திருக்கும் பகுதி, தாய்மார்கள் அறை, உணவகம், காபி கடை மற்றும் குடிநீர் வசதி ஆகியவை இருக்கும்.
முதல் தளத்தில் தங்கும் அறைகள், மருத்துவமனை மற்றும் மருந்தகம் இருக்கும். எல்லா தளங்களும் தி நகர் ஸ்கைவாக் அணுகலுடன் வணிக இடங்கள் இருக்கும்.
புதிய வடிவமைப்பின் கீழ், CMDA உஸ்மான் சாலையில் தற்போதுள்ள நுழைவு வாயிலுக்கு 50 மீட்டர் முன்னதாக ஒரு நுழைவு வாயிலை உருவாக்க உள்ளன. தற்போது, சொகுசு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைய குறுகிய U- திருப்பம் எடுக்கின்றன. ஒரே நேரத்தில் பத்து பேருந்துகள் நுழையும்போது, ஓட்டுநர்கள் பேருந்துகளை சாலையில் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், காவல் நிலைய சாலையில், ஒயிட் போர்டு பேருந்துகள் இடதுபுறம் திரும்பும் போது பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. CMDA பேருந்து நிலையத்தின் பரப்பளவை நான்கு அடி உயர்த்துவதன் மூலம் மழைநீர் தேங்குவதை தடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
தியாகராய நகர் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் இந்த திட்டம், பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, வணிக வளாகம் மூலம் அப்பகுதிக்கு கூடுதல் வருவாயை ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications