சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் பெரிய மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 7,8,9,10, 12-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் 26,27 ஆகிய தேதிகளில் கோட்டையம் மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வந்தடையும். எர்ணாகுளம், ஆலப்புழா போன்ற ரயில் நிலையம் செல்லாது. மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூரில் இருந்து ஜனவரி 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (6, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 27 தவிர) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "திருவனந்தபுரம் கோட்டத்தில் இந்த மாதம் (ஜனவரி) பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:- குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16128), வருகிற 7,8,9,10, 12-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் 26,27 ஆகிய தேதிகளில் கோட்டையம் மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வந்தடையும். எர்ணாகுளம், ஆலப்புழா போன்ற ரயில் நிலையம் செல்லாது.

சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில் (22207), வருகிற 9,16,23 ஆகிய தேதிகளில் கோட்டயம் மாற்றுப்பாதை வழியாக திருவனந்தபுரம் செல்லும். எர்ணாகும், ஆலப்புழா செல்லாது.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16127) வருகிற 3, 10 ஆகிய தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக குருவாயூர் சென்றடையும். இதே ரயில் 5, 7, 14 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகவும், 8, 12 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாகவும், 9, 13 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் தாமதமாகவும், 16-ந்தேதி 20 நிமிடம் தாமதமாகவும், 20, 23, 26 ஆகிய தேதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாகவும் குருவாயூர் சென்றடையும். ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில்வே அதிகாரபூர்வ இணையதளம், என்.டி.இ.எஸ். செயலி மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இன்னொரு செய்திக்குறிப்பில் கூறுகையில் : மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூரில் இருந்து ஜனவரி 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (6, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 27 தவிர) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரயில், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் கூடுதலாக நின்று செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications