சென்னை தாம்பரம் இடையே மின்சார ரயிலில் போவீங்களா.. இந்த ரயில் சேவைகள் எல்லாம் ரத்து.. உடனே பாருங்க
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நவம்பர் முதல் வாரம் வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து சேவைகளை பூர்த்தி செய்வதில் மின்சார ரயில் சேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன.சென்னையில் சென்டரல் அரக்கோணம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- திருத்தணி, சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடஙகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் சென்னை கடற்கரை -தாம்பரம் வழித்தடம் மிக முக்கியமானதாகும். அவ்வப்போது இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர்- விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகள் இன்று முதல் நடைபெற உள்ளது.இதனால் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு அக்டோபர் 19, 20, 25, 26, 27, 28, 30, 31, நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு அக்.29-ம் தேதி இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு அக்.19, 20, 25, 26, 27, 28, 30, 31, நவ.1,2, 3 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு அக்.29-ம் தேதி இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நள்ளிரவில் சென்னை தாம்பரம் வழித்தடத்தில் பயணிப்போர் மேற்கண்ட நாட்களில் ரயில் சேவை நேரத்தை அறிந்து செல்வது நல்லது. இல்லாவிட்டால் மின்சார ரயில்கள் இயங்காதது தெரியாமல் சென்று அவதிப்பட நேரிடலாம். கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பலரும் மின்சார ரயில் சேவை இல்லாதது தெரியாமல் சென்று அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications