பிஎஃப் பணம் எடுப்பது ரொம்ப ஈசி.. இந்த மாதமே அமலாகும் புதிய முறை.. என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?
சென்னை: ஏடிஎம் வாயிலாகவே பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஜூன் மாதம் முதல் இந்த வசதி அமலுக்கு வரும் என்று துர்தர்ஷன் செய்தி வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பயன்பெறும் வகையில் சில மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் வர இருக்கும் வசதிப்படி, தொழிலாளர்கள் பணம் எடுக்க விண்ணப்பிக்கும் போது ஏற்படும் காலதமாதம் தவிர்க்கப்படும். அனைத்தும் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இபிஃஎப்ஓ எனும் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாதம் தோறும் பிடித்தம் செய்யப்படும்.

வருங்கால வைப்பு நிதி
அதேபோல, தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். பிஎப் கணக்கில் உள்ள பணத்தை அவசர காலத்திற்கு எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. இவற்றை ஆன்லைனில் கிளைம் செய்து பெற்றுக்கொள்ளலம்.
தங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை கிளைம் செய்யும் போது அவை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வந்து சேருவதற்குள் கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிவிடுகிறது. இதனால், ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் விதமாக பிஎப் பணத்தை எடுக்கும் வசதியில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பணம் எடுக்கும் வசதியை டிஜிட்டல்மயப்படுத்தி ஏடிஎம் வாயிலாகவே பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்த வசதி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பயனாளர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில்தான், ஜூன் மாதம் முதல் இந்த வசதி அமலுக்கு வரும் என்று துர்தர்ஷன் செய்தி வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பயன்பெறும் வகையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அது குறித்த விவரம் வருமாறு;
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி
இபிஎப் கணக்கில் இருந்து பணத்தை தொழிலாளர்கள் ஏடிஎம்களில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும். வங்கி பரிவர்த்தனை போலவே ஏடிஎம்மில் எடுக்க முடியும். பணத்திற்கான செட்டில்மெண்ட் கிளைம்களுக்கு ஒப்புதல் கிடைத்ததும், ஏடிஎம் மூலமாக எடுக்க முடியும்.
வேகமான செட்டில்மெண்ட்:
* விரைவில் வர இருக்கும் வசதிப்படி, தொழிலாளர்கள் பணம் எடுக்க விண்ணப்பிக்கும் போது ஏற்படும் காலதமாதம் தவிர்க்கப்படும். அனைத்தும் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. manual நடைமுறை இன்றி ஆட்டோமெட்டிக் முறையில் கிளைமிங் நடைமுறைகள் நடைபெறும் என்பதால், விரைவாக பணம் எடுக்க முடியும்.
* பிஎப் கணக்கில் உள்ள தகவல்களை டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம், பெயர், பிறந்த தேதி உள்பட முக்கியமான தகவல்களை டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யலாம். காகித ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.
* ஒடிபி மூலமாக கணக்கு விவரங்களை அப்டேட் செய்ய முடியும். குறைதீர்ப்பு முறையும் மேம்படுத்த்தப்படுகிறது. புதிய அப்டேட் தளத்தின் மூலம் பயனாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தல் அதை சுட்டிக்காட்டி விரைவாக தீர்வு காண முடியும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications