இன்று முதல் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு கிரேட் நியூஸ்.. தமிழக அரசின் 'என்ஆர்ஐ ஆப்' தெரியுமா?
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தபடி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் புகார்களைத் தடையின்றி பதிவுசெய்ய பிரத்யேக செயலியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. இன்று முதல் (ஆக 4) இந்த ஆப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இன்று முதல் புதிய செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் அறிவித்ததன்படி, காவல்துறை தலைமை அலுவலகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு ஜூலை 2022 முதல் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவானது வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் குறைகளை தீர்த்து வைப்தற்காக துவக்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை தங்குதடையின்றி பதிவு செய்தவற்கு ஏதுவாக , தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியானது இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்த பிரத்யேக செயலியில் புகார்களை பதிவு செய்தவுடன், புகார்தாரர்களுக்கான தனி முகவரி எண் உருவாக்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் பெறப்படும் புகார் மனுக்கள்,சரிபார்ப்பிற்கு பின்னர் சம்பந்தப்பட்ட மாநகர, மாவட்ட காவல்துறையின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் உரிய விசாரணைக்கு பிறகு அறிக்கையின் விவரங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் உள்ள அதிகாரியன் அங்கீகாரத்துடன் புகார்தாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.
புகார் மனுக்கள் தொடர்பான அறிக்கைகளை இச்செயலி மூலம் தேதி வாரியாகவும், நாடு வாரியாகவும், புகாரின் வகை வாரியாகவும், புகார் மனுக்கள் மீதான நிலைமை வாரியாகவும் பல்வேறு அறிக்கைகளாக பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலிக்கான இணைப்பு தமிழ்நாடு காவல்துறை வலைதளத்தில் https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?10 இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பயனர் வழிகாட்டி, தமிழ்நாடு காவல்துறை யூடியூப் சேனலில (tnpoliceofficial) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இச்செயலில் புகார் தெரிவிப்பது குறித்து ஏதேனும் கேள்விகள் இருப்பின் வெளிநாடு வாழ இந்திடியர்கள் பிரிவு தொலைபேசி எண் 044-28470025 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications