கூகுள் பே இருக்குல்ல? நீங்க இதை செய்தால் "யுபிஐ" மூலம் மொத்த பணமும் போயிடும்.. போலீஸ் அவசர அலர்ட்
சென்னை: ஆன்லைன் மோசடிகள் பெருகி வரும் நிலையில், பலரும் தங்கள் பணத்தை மோசடிப்பேர்வழிகளிடம் இழந்து தவித்து வருகிறார்கள்.. எனவே, சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து முக்கிய அறிவுரையையும், அது தொடர்பான எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.
ஆன்லைன் வசதிகள் பெருக பெருக, அது தொடர்பான மோசடிகளும் நடந்து வருகின்றன.. அந்தவகையில், கூகுள் பே-வில் நாளுக்கு நாள் புதுவிதமான மோசடி ஆரம்பமாகி உள்ளது.

பரிவர்த்தனைகள்: இப்போதெல்லாம் டீக்கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை, ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் எனப்படும் கூகுள் பே ஆப் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதனால்தான், நூதன முறையில் மோசடிகளும் மலிந்துவிருகின்றன.
எனவே, UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள், யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பிறகே அனுப்ப வேண்டும்.. பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது.. அதேபோல, UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.. UPIல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தவறுதலாக பணம்: எனினும், கூகுள் பே செயலியின் மூலம் ஒருவரது நம்பருக்கு, அல்லது UPI ID-க்கு வேண்டுமென்றே தவறுதலாக பணத்தை அனுப்பும் மோசடி நபர், தாம் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகக் சொல்லி மறுபடியும் மீண்டும் அந்த பணத்தை அவரது எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு சொல்கிறாராம்.. அப்படி பணத்தை நாம் திருப்பி அனுப்பும்பட்சத்தில், நம்முடைய வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிடும்.. பணமும் பறிபோய்விடும்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, "சமீப நாட்களாகவே புதிய வகை மோசடி தொடங்கியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்குக்கு Google Pay மூலமாக பணம் அனுப்புகிறார்.. மேலும் உங்கள் பணத்தின் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை போனில் அழைக்கிறார்.
ஹேக் செய்யப்படும்: அதன் பிறகு தவறுதலாக அனுப்பிய பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்...
எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் பெற்றிருந்தால் அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி ஆங்காங்கே நடைபெற தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் " என்று சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
அதேபோல, பணத்தை பெறுவதற்கு QR ஸ்கேன் செய்ய தேவையில்லை. ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு, போனில் மெசேஜ் வந்தால், அதையும் தவிர்க்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications