சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ரேஷன் கடைகளில் நடக்கும் மேஜர் மாற்றம்.. அரசு உத்தரவு
சென்னை: சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மண்டலங்களில் இயங்கி வரும் 340 ரேஷன் கடைகள் சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்ட எல்லைக்கு ஏற்ப மாற்றம் செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணையில் கூறியுள்ளதாவது: "கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-1), சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-2) ஆகியவற்றின் கீழ் செயல்படும் 225 ரேஷன் கடைகள் (221 முழுநேரம், 4 பகுதி நேரம்) செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திலும், 107 ரேஷன் கடைகள் (101 முழுநேரம், 6 பகுதிநேரம்) திருவள்ளூர் மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், காஞ்சீபுரம் மண்டலத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் 8 முழுநேர ரேஷன் கடைகள் பெருநகர சென்னை மாநகராட்சி வரையறைக்குள் செயல்பட்டு வருகின்றன. கண்காணிப்பு பணிகளில் ஏற்படும் சிக்கல்களை களையும் வகையில் இந்த கடைகள் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றன.
அதன்படி, சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-2) மண்டலத்தில் இயங்கி வரும் காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் 186 ரேஷன் கடைகள், மேடவாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் 38 ரேஷன் கடைகள், ஐ.ஏ.எப். பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் ஒரு ரேஷன் கடை என 225 ரேஷன் கடைகள் செங்கல்பட்டு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன.
சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-1) மண்டலத்தில் இயங்கி வரும் பூங்கா நகர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் 56 ரேஷன் கடைகள், சைதாப்பேட்டை தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் 42 ரேஷன் கடைகள், காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் 9 ரேஷன் கடைகள் என 107 ரேஷன் கடைகள் திருவள்ளூர் மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன.
இதே போன்று, காஞ்சீபுரம் மண்டலத்தில் இயங்கி வரும் கொளப்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் நடத்தி வரும் 8 ரேஷன் கடைகள் சென்னை இணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்-2) மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. மொத்தத்தில் 340 ரேஷன் கடைகள் மாற்றம் செய்யப்பட உள்ளன" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications