அரண்ட சென்னை.. கோட்டையின் "பார்வையை" திருப்பிய பார்வையற்ற மாற்று திறனாளிகள்.. என்னே ஒரு மன உறுதி !!
சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், சென்னையின் பிரதான சாலைகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர், கடந்த 12ம் தேதி இந்த போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முன்னெடுத்தனர்.. பிறகு, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே நேற்று சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு பிறகு, வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஈ.வெ.ரா.சாலை சிக்னல் சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இப்படி சென்னையின் பிரதான சாலைகளில், இவர்கள் மறியலை நடத்தி வருவதால், அந்தந்த சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. சாலைகளின் இருபுறமும் நீண்டவரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழலும் உருவாகின்றன.. எனினும், போலீஸார் வாகனங்களை மாற்றுவழிகளில் திருப்பிவிட்டு போக்குவரத்து நெரிசலை சமாளித்து வருகிறார்கள்.. சிலசமயம், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து போலீஸார் அப்புறப்படுத்தினார்கள்..
வள்ளுவர் கோட்டம்: வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தியபோது, அவர்களை கைது செய்து விடுவித்து, கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்தனர். மறுநாள் கமிஷனர் ஆபீஸை முற்றுகையிட்ட போதும், அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ்களில் அனுப்பி வைத்தனர்.
இன்று சென்னையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் பஸ் ஸ்டாண்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்துள்ளனர்.
கீதாஜீவன்: சென்னையை உலுக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் இந்த போராட்டமானது, சட்டப்பேரவையிலும் எதிரொலித்துள்ளது.. சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இதுசம்பந்தமான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
"பார்வையற்ற மாற்றுத் திறன் பட்டதாரிகள் தங்களுக்கு ஆசிரியர் பணிவழங்க வேண்டும் என்று கடந்த2012-ம் ஆண்டு முதலே கோரிக்கைவிடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தேர்வு இல்லாமல் அவர்களுக்கு ஆசிரியர் பணிவழங்குவது முடியாத காரியம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் இப்போது பரிசீலிக்கப்படும்" என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உறுதி: சில நாட்களுக்கு முன்புகூட, மெரினா பீச்சில் இருக்கும், மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்..
இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே, மாற்று திறனாளி நலத்துறை அதிகாரிகள் அங்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.. ஆனாலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாற்று மாற்றுத்திறனாளிகள் அறிவித்திருப்பதும், அதை தொடர்ந்து அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதையும் பார்த்து சென்னையே மிரண்டு போயுள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications