July 1 changes: ரயில் டிக்கெட் உயர்வு முதல் தட்கல் வரை! எல்பிஜி முதல் பான் வரை! ஜூலை 1ல் மாற்றங்கள்
சென்னை: ஜூலை 1 ஆம் தேதி முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதாவது எல்பிஜி சிலிண்டர் முதல் ஊழியர் பிஃஎப் வரை ஏராளமான மாற்றங்கள் நிகழ போகிறது. அவை என்னென்ன என்பதை காணலாம்.
எரிவாயு சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று மாறுகிறது. சில நேரம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாறும். சில நேரங்களில் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாறும்.

அந்த வகையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இருந்தது. வரும் ஜூலை 1 ஆம் தேதி எந்த பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயருமா, இல்லை குறையுமா என்பதை பார்க்கலாம்.
பான் கார்டு
அது போல் புதிய பான் கார்டை பெற விரும்பினால் ஜூலை 1, 2025 முதல் உங்களிடம் ஆதார் கார்டு இருத்தல் வேண்டும். மேலும் ஒருவரின் பான் கார்டு, ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால் அதை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
ரயில் டிக்கெட்
வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சிலர் போலி பெயர்களில் பான் கார்டுகளை உருவாக்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு, கட்டணங்கள் தொடர்பாகவும் மாற்றங்களைச் செய்துள்ளது. ஏசி வகுப்பு அல்லது நான்- ஏசி பெட்டிகளில் பயணிக்கும் விலை ஓரளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏசி இல்லாத பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், ஏசி வகுப்புள்ள பெட்டிகளில் பயணம் செய்ய கிலோ மீட்டருக்கு 2 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட்
ரயிலில் காத்திருப்பு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் மொத்த இருக்கையில் 25 சதவீதத்திற்கு அதிகமாக காத்திருப்பு டிக்கெட்டுகள் வழங்கப்படாது. அதாவது ஒரு பெட்டியில் 100 இருக்கைகள் இருந்தால் 25 காத்திருப்பு டிக்கெட்டுகள் (waiting list) மட்டுமே கிடைக்கும். எனினும் இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதாருடன் இணைக்க
ஜூலை 1 ஆம் தேதி முதல் IRCTC கணக்கை ஆதாருடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இது தவிர ஜூலை 15 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி-ஐ உள்ளிடுவது அவசியம். ஓடிபி கொடுக்காவிட்டால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது.
ஐசிஐசிஐ ஏடிஎம்
ஜூலை 1ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ ஏடிஎம்மில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ 23 செலுத்த வேண்டும். பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் 5 முறையும், பெருநகரங்களில் 3 முறையும் பணம் எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் பணம் செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு
ஜூலை 1 ஆம் தேதி முதல் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு மூலம் மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்தினால் அதற்கு தனி கட்டணம் விதிக்கப்படுகிறதாம். ஜூன் மாதமே இபிஎஃப்ஓ 3.0 தொடங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதம் அமலுக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது. இபிஎஃப் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ஏடிஎம்மில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.












Click it and Unblock the Notifications