ரேஷனில் இந்த மாற்றத்தை செய்யணுமா? இனி ரொம்ப ரொம்ப ஈஸி.. தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு
சென்னை: ரேஷனில் புதிய பெயரை சேர்ப்பது இப்போது மிகவும் எளிதாகி உள்ளது. ஆன்லைன் மூலம் மிக எளிதாக பெயர்களை சேர்க்க முடியும்.
தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.
பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

ரேஷன் கார்ட் மக்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்கும் முக்கியமான அட்டையாக மட்டுமில்லாமல்.. அது மிக முக்கியமான அடையாள அட்டையாகவும் உள்ளது. பல சேவைகளுக்கு ரேஷன் அட்டைகள் மிக முக்கியம். இப்படிப்பட்ட ரேஷன் அட்டைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம்பெறுவது முக்கியம் ஆகும்.
புதிதாக பிறந்த குழந்தை, புதுமண தம்பதிகள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறுவது மிக முக்கியம். இப்படி ரேஷனில் புதிய பெயரை சேர்ப்பது இப்போது மிகவும் எளிதாகி உள்ளது. ஆன்லைன் மூலம் மிக எளிதாக பெயர்களை சேர்க்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: பின்வரும் படிநிலைகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் எளிதாக ரேஷன் அட்டைகளில் பெயர்களை சேர்க்க முடியும்.
1. உங்கள் அருகில் இருக்கும் இ-சேவை மையத்தை அணுகவும்.
2. அங்கு அதிகாரப்பூர்வ உணவுத் துறை இணையதள பக்கத்திற்கு செல்லவும். அங்கே பல பார்ம்கள் இருக்கும்.
3. இதில் படிவம் எண் 3 என்பது புதிய பெயர்களை ரேஷனில் சேர்ப்பதற்கான பார்ம்.
4. அதை பூர்த்தி செய்யவும். அதில் கேட்கப்பட்டு உள்ள விவரங்களை முறையாக கொடுக்கவும்.
5. கடைசியில் பார்மில் குடும்ப தலைவர் கையெழுத்து போட்டுவிட்டு அதை அதே பக்கத்தில் அப்லோட் செய்யவும்.
6. அல்லது அருகில் உள்ள அதிகாரப்பூர்வ உணவுத் துறை மையத்திற்கு சென்று பார்மை கொடுக்கவும்.
சரிபார்ப்பு முடிந்ததும் விரைவில் புதிய பெயர் ரேஷனில் சேர்க்கப்படும்.
ரேஷன் அதிரடி: ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அரிசி, சர்க்கரை. கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை எடையில் மாற்றம் இருக்காது. பொருட்களும் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
இன்னொரு பக்கம் மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் பல்வேறு மாநிலங்களில் வரும் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது அரிசியை செறிவூட்டி, அதிக சத்துக்களுடன் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் தமிழ்நாட்டிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தை இன்னும் சில மாதங்களுக்குள் மொத்தம் கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை, ரேஷன் ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள், முறைகேடு செய்கிறார்கள் என்று தோன்றினால் அதை பற்றி புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 18004255901 என்ற புகார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த எண்ணை தொடர்பு கொண்டு ரேஷன் தொடர்பான புகார்களை அளிக்க முடியும்.
சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்












Click it and Unblock the Notifications